Happy Kiss Day 2023: காதலர்களுக்கான சிறந்த பரிசு மலரா முத்தமா அரவணைப்பா?

Health Benefits Of Kissing: காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்தவருக்கு வழக்கமாக பல பரிசுகளைக் கொடுத்தாலும், முத்த நாளுக்கு காதலுக்கு பரிசாக முத்தத்தை தானே கொடுக்க முடியும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 13, 2023, 11:18 AM IST
  • முத்தம் கொடுத்தா இவ்வளவு நல்லது நடக்குமா? எத்தனை உம்மா வேணும்?
  • முத்த நாளுக்கு காதலுக்கு பரிசாக முத்தத்தை தானே கொடுக்க முடியும்?
  • முத்தத்திற்கு மாற்றுப் பரிசு ஏதேனும் உண்டா?
Happy Kiss Day 2023: காதலர்களுக்கான சிறந்த பரிசு மலரா முத்தமா அரவணைப்பா?  title=

Kiss Day 2023: காதலர் தினத்தை கொண்டாட மட்டும் ஒரு நாள் போதுமா? ஆனால், என்றும் எப்போது வேண்டுமானாலும் ஊற்றெடுக்கும் காதலுக்கு மரியாதை செய்யும் வகையில், பிப்ரவரி-14 காதலர் தினம். காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர்களாக மாறியவர்களுக்கு காதலர் தினத்திற்கு ஒரு நாள் போதும். ஆனால், காதலர்களாக மாறுவதற்கு வழிவகுக்கும் நாட்கள் என இந்தக் காலத்தில் கருதும் சில விஷங்களையும் கொண்டாடும் வகையில், ஒரு வாரம் காதல் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பகிர்ந்துகொள்ளும் விதமாக மனம் கவர்ந்தவருக்கு வாழ்த்து அட்டை, பூக்கள், பரிசு பொருட்கள் போன்றவற்றை கொடுத்து மகிழ்கின்றனர். 

பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை கொண்டாடப்படும் காதலர் வாரத்தில், காதலர்கள் பல்வேறு விதங்களில் தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள். தங்கள் காதலுக்கு உரியவருக்கு எதிர்பாராத, தனித்துவமான, வித்தியாசமான பரிசுகளை வழங்கவேண்டும் என்ற ஆசையை, காதலிக்காதவர்களுக்கும் தூண்டும் அளவுக்கு காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதை பயன்படுத்திக் கொள்ளும் ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள், அனைவருக்கும் இருக்கும். காதலர் தினம் மற்றும் காதலர் வாரத்தை முன்னிட்டு, வாழ்த்து அட்டை உள்ளிட்ட பல வித பொருட்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவித்துள்ள நிலையில் வியாபாரமும் களைகட்டியுள்ளன. ஆனால், பிற நாட்களுக்கு பொருட்களை பரிசளித்தாலும், முத்த நாளுக்கு காதலுக்கு பரிசாக முத்தத்தை நீங்கள் தானே கொடுக்க முடியும்?

அப்படி நீங்கள் கொடுக்கும் முத்தம் மனதிற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் எவ்வளவு நல்லது தெரியுமா? ஆரோக்கியத்தை அதிகரிக்கும் முத்தத்திற்கு ஜே என்று சொல்ல வைக்கும் அளவுக்கு முத்தம் கொடுப்பதால் நன்மைகள் இருக்கிறதாம்.

மேலும் படிக்க | Rose Day 2023: மலர் போல் மணக்கும் காதலுக்கு ஜே! ’ரோஸ் டே” கொண்டாடலையா?

முத்தத்தின் 8 ஆரோக்கிய நன்மைகள்
இரத்த அழுத்தத்தைக் குறைக்க முத்தம் உதவுகிறது. முத்தம் உங்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது, இதனால் இரத்த அழுத்தம் குறையும். 
பிடிப்புகள் மற்றும் தலைவலியைப் போக்கும்                                                                                                                                                                                                                                                    முக தசைகள் இறுகி, முகம் அழகாகும்  
இணையும் இணக்கத்தன்மை அதிகரிக்கும்
உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாகும்
உடலின் கலோரிகள் அதிகம் செல்வாகி உடல் பருமன் குறையும். ஒரு நிமிடம்முத்தமிட்டால், 2 முதல் 3 கலோரிகள் எரிக்கப்படுகின்றன                                                                      உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது

மேலும் படிக்க | Valentine Week 2023: அட! இதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா?

முத்த நாள் வரலாறு என்ன?

6ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டினர் நடனமாடியும், நடனம் முடிந்ததும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து தங்கள் காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது உறுதிமொழி எடுக்கும்போது ரஷ்யாவில் முத்தமிடுதல் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஒருவரையொருவர் முத்தமிடும் பாரம்பரியம் ரோமில் வாழ்த்து சொல்லும் நேரத்தில் தொடங்கியது. இவ்வாறாக,  உணர்வுகளை வெளிப்படுத்தும் முத்தம் கொடுக்கும் வழியை, அனைவரும் ஏற்றுக் கொண்டு, முத்தத்தை வாழவைத்துக் கொண்டிருக்கின்றனர். 

காதலர் வாரத்தின் ஏழு நாட்கள் 

பிப்ரவரி 7 - ரோஜா தினம்.
பிப்ரவரி 8 - முன்மொழியும் நாள்.
பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்.
பிப்ரவரி 10 - டெடி டே.
பிப்ரவரி 11 - வாக்குறுதி நாள்.
பிப்ரவரி 12 - கட்டிப்பிடி நாள்.
பிப்ரவரி 13 - முத்த நாள்.
பிப்ரவரி 14 - காதலர் தினம்

மேலும் படிக்க | யாரின் காதலுக்கு ஜே? காதலை இன்று சொல்லாதீர்கள்! Propose Day எச்சரிக்கை

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News