முடிக்கு தினசரி எண்ணெய் வைக்கவில்லை என்றால் முடியை வலுவிழக்க செய்து உயிரற்றதாக மாற்றிவிடும். முடிக்கு எண்ணெய் தடவுவது மிகவும் முக்கியமான ஒன்று. இவை முடிக்கு ஊட்டமளித்து நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்ற எண்ணெய் மிகவும் அவசியம். எண்ணெய் வைப்பதன் மூலம் தலை வறண்டு போகாமல் இருக்கும். சிலர் காலையில் குளித்த பிறகு தலைக்கு எண்ணெய் வைக்கின்றனர், ஒருசிலர் இரவில் தூங்கும் முன்பு தலைக்கு எண்ணெய் வைக்கின்றனர். மேலும் சிலர் ஷாம்பு போடுவதற்கு முன்பு தலைமுடிக்கு எண்ணெய் வைக்கின்றனர். குளித்த பிறகு எண்ணெய் வைத்தால் முகத்தில் எண்ணெய் வடியும் என்பதால் சிலர் குளிப்பதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் வைக்கின்றனர். இந்நிலையில், முடிக்கு எப்போது எண்ணெய் வைப்பது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Parenting Tips: உங்கள் குழந்தைகளை அறிவாளியாக மாற்றுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ!
முடிக்கு எப்போது எண்ணெய் தடவ வேண்டும்?
முடிக்கு எண்ணெய் வைப்பது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அதே வேளையில் உடல் சூட்டையும் குறைக்க உதவுகிறது. அதே சமயம் முடிக்கு ஏற்ற எண்ணையை பயன்படுத்துவதும் முக்கியம். குளிப்பதற்கு முன்பு முடிக்கு எண்ணெய் வைப்பது நல்லது. குறைந்தபட்சம் 1 மணி நேரத்திற்கு முன்பே எண்ணெய் தடவ வேண்டும். அதன் பிறகு ஷாம்பு கொண்டு முடியை கழுவினால், முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகள் சரியாகி நன்மைகள் கிடைக்கும். பொதுவாக முடி ஆரோக்கியமாக இருக்க புரதச்சத்து அவசியமான ஒன்று. முடிக்கு மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை தருகிறது. மேலும் புரதச் சத்து குறைபாட்டை சரி செய்கிறது. முடியில் புரதம் இல்லாததால், பலவீனமடைய தொடங்குகிறது.
முடிக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தலைக்கு எண்ணெய் வைப்பது, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. தினசரி முடிக்கு எண்ணெய் வைக்கும் போது, இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. முடி பலமாக இருக்கு எண்ணெய் வைப்பது மிகவும் அவசியம். இவை முடி வேர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் இரத்த விநியோகம் போன்றவற்றை மேம்படுத்தப்படுகிறது. இவை முடிக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குவதோடு, முடி உதிர்தலையும் குறைக்கிறது.
குளிர்காலத்தில் எண்ணெய் வைக்கலாமா?
ஈரப்பதமான வானிலை தலைமுடியை உயிரற்றதாக மாற்றுகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். முடி காற்றில் இருந்து அதிக ஈரப்பதத்தை உறிஞ்சி முடியின் தண்டு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக முடி அதிகம் உடையக்கூடியதாக மாறும். மேலும் வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக உச்சந்தலையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இது பொடுகு மற்றும் உச்சந்தலையில் பாதிப்படைய செய்து முடி வேர்களை வலுவிழக்கச் செய்கின்றன. எனவே இந்த சமயத்தில் முடிக்கு எண்ணெய் வைப்பது கூடுதல் பாதுகாப்பை தருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ