ஏசி - பிரிட்ஜ்களுக்கான பவர் ரேட்டிங்கைப் போலவே டயர்களுக்கான நட்சத்திர மதிப்பீடு தொடர்பான புதிய விதிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. .இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) இது குறித்து டயர் தயாரிப்பாளர்களுடன் விரிவாக ஆலோசனை செய்துள்ளது. தற்போது, டயர்களின் தரத்திற்கு BIS விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
டயர்களை மதிப்பிடுவதற்கான புதிய விதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏசி - பிரிட்ஜ்களுக்கான பவர் ரேட்டிங்கைப் போலவே டயர்களுக்கும் ஸ்டார் ரேட்டிங் அறிமுகப்படுத்தப்படும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. எரிபொருளை சிறப்பாக சேமித்தல், மைலேஜை அதிகரித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், மிகச்சிறந்த டயர்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கிடைக்கும் என கூறப்படுகிறது
நட்சத்திர மதிப்பீடு மூலம் தரமற்ற டயர்களை இறக்குமதி செய்வதையும் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள டயர்கள் மூலம் 5 முதல் 10 சதவீதம் எரிபொருளை சேமிக்கும்.
மேலும் படிக்க | டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே தயாரிக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா..!!
வாகனங்களின் டயர்களுக்கும் ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் வாகன உரிமையாளர்கள் சிறத டயர்களை தேர்வு செய்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது மட்டுமின்றி, வாகனங்களின் மைலேஜையும் அதிகரிக்கலாம்.
மேலும் அரசின் இந்த நடவடிக்கை தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும். இதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் சிறந்த டயர்களை தயாரிக்க ஊக்கம் கிடைக்கும்.
இருப்பினும், 5 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்ட டயர்களின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். தற்போதைய நிலவரப்படி, சாதாரண டயர்களுடன் ஒப்பிடும்போது, ஸ்டார் ரேட்டட் டயர்களின் விலை எவ்வளவு அதிகம் என்பது குறித்து எந்த செய்தியும் இல்லை. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்த ஆண்டு டயர் விலை 8-12 சதவீதம் உயர்ந்துள்ளது. டயர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக டயர் உற்பத்தி நிறுவனங்கள் டயர்களின் விலையை உயர்த்தியுள்ளன.
தேவை அதிகரிப்பு, வரத்து குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் டயர் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இயற்கை ரப்பர் விலை உயர்ந்துள்ளது. இயற்கை ரப்பரின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. 2021-22 நிதியாண்டில், இயற்கை ரப்பரின் உள்நாட்டு விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | விமானத்தின் ‘டயர்’ பகுதியில் 11 மணி நேரம் பயணித்து உயிர் தப்பிய அதிசயம்.!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR