தபேலா ஜாம்பவான் லச்சு மகாராஜை கவுரவித்த Google Doodle!!

உலகப் புகழ் பெற்ற தபேலா இசைக்கலைஞர் லச்சு மகாராஜின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கூகுள், சிறப்பு டூடுலை தனது முகப்புப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Last Updated : Oct 16, 2018, 10:24 AM IST
தபேலா ஜாம்பவான் லச்சு மகாராஜை கவுரவித்த Google Doodle!! title=

உலகப் புகழ் பெற்ற தபேலா இசைக்கலைஞர் லச்சு மகாராஜின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கூகுள், சிறப்பு டூடுலை தனது முகப்புப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தபேலா இசையில் தனக்கென தனி முத்திரை பதித்த லக்ஷி நாராயண்சிங். இவர் 1944-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி வாரணாசியில் பிறந்தார்.

தபேலா வாசிப்பில் ஒன்றான பெனாரஸ் கரோனாவில் சிறந்து விளங்கிய லச்சு மகாராஜ், பல படங்களிலும் நடித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் இன்று இந்தி திரைப்பட உலகில் தபேலா கலைஞர்களாக உள்ளனர்.

மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் அளிக்க முன் வந்த போது, இசை ரசிகர்கள் கொடுக்கும் கவுரவத்தை விட மிகப்பெரிய விருது வேறொன்றுமில்லை, எனவே பத்மஸ்ரீ விருது தேவையில்லை என்று கூறியவர் இவரே. 1957-ம் ஆண்டு இயல் இசை நாடகத்துறையில் அதிகப்பட்ச விருதான சங்கீத நாடக அகாடமி விருதினை பெற்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் தபேலா இசைக்கலைஞர் லச்சு மகாராஜ் மறைந்தார். இந்நிலையில், லச்சு மகாராஜின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள், சிறப்பு டூடுலை தனது முகப்புப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Trending News