இந்தியன் ரயில்வே: ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!! ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படுவதால் ரயில் கட்டணங்களில் எந்த உயர்வும் இருக்காது என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புத் திட்டம் காரணமாக ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அவர் கூறினார். முன்னதாக, நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தற்போதைய பட்ஜெட்டில் மறுசீரமைப்புத் திட்டத்திற்குத் தேவையான சுமார் 25,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று கூறிய அஷ்வினி வைஷ்ணவ், இந்தத் திட்டம் சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் உள்ள பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார்.
சாமானியர்களின் வாழ்க்கையை உயர்த்த பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ஸ்டேஷன் மறுமேம்பாட்டின் நோக்கமும் அதில் ஒன்றுதான். பயணிகளுக்கு எந்த வித சிரமத்தையும் அளிக்காமல் மறுசீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஸ்டேஷன் மறுசீரமைப்பு என்ற பெயரில் நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று வைஷ்ணவ் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் படிக்க | Indian Railways: சிக்கனத்தில் இறங்கும் ரயில்வே... பயணிகளுக்கு இதனால் பலன்கள் என்ன?
நாட்டில் உள்ள சுமார் 1,300 பிரதான நிலையங்களை அமிர்த் பாரத் நிலையங்களாக மறுவடிவமைக்கும் திட்டத்தை ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் மோடி 508 அமிர்த பாரத் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இதுபோன்ற தலா 55 நிலையங்கள் சுமார் ரூ.4,000 கோடியிலும், மத்தியப் பிரதேசத்தில் 34 நிலையங்கள் சுமார் ரூ.1,000 கோடியிலும், மகாராஷ்டிராவில் 44 நிலையங்கள் 1,500 கோடியிலும் உருவாக்கப்படும். இவை தவிர, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள பல ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும்.
ஒப்பந்த ஆவணங்கள், கட்டிடக்கலை, வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய திட்டத்தின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதற்காக ரயில் நிலைய மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 9,000 பொறியாளர்களுக்கு ரயில்வே பயிற்சி அளித்து வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
“இந்த திட்டம் எந்த வித பாரபட்சமும் இன்றி அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இதன் பணிகளில் கணிசமான முன்னேற்றத்தைக் காண முடியும். சமத்துவ வளர்ச்சியில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாம் ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினால் உடனடியாக அதை துவக்கி வைப்பதற்கான பணிகளையும் முழு வீச்சில் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிஜி எப்போதும் கூறுகிறார். அதாவது திட்டங்கள் விரைவாக முழுமை பெற வேண்டும் என்பதில் அவர் அதிக கவனம் செலித்துகிறார் என்பது பொருள்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த 9 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா, உக்ரைன், போலந்து, இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள ரயில் பாதைகளின் நீளத்தை விட, நமது நாட்டில் அமைக்கப்பட்ட ரயில் பாதைகளின் நீளம் அதிகம்.
தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த ரயில்வே நெட்வொர்க்கை விட கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா அதிக ரயில் பாதைகளை அமைத்துள்ளது’ என தெரிவித்தார்.
இந்தியன் ரயில்வே
இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க | Indian Railways இரவு நேர பயண விதிகளில் மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ