PF சூப்பர் செய்தி!! ஊழியர்களுக்கு ரூ. 40,000 கிடைக்கும், விவரம் இதோ

PF Interest: தங்கள் கணக்கில் 5 லட்சம் ரூபாய் கொண்டுள்ள பிஎஃப் கணக்குதாரர்களுக்கு அவர்களது கணக்கில் ரூ.40 ஆயிரம் வட்டி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 21, 2022, 04:57 PM IST
  • நாட்டின் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் சொந்த பிஎஃப் கணக்கை வைத்திருக்கிறார்கள்.
  • அதில் அவர்கள் ஒவ்வொரு மாதமும் பங்களிக்கிறார்கள்.
  • உங்கள் சம்பளத்தில் இருந்து பிஎஃப் தொகை கழிக்கப்பட்டால், விரைவில் ஒரு பெரிய தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
PF சூப்பர் செய்தி!! ஊழியர்களுக்கு ரூ. 40,000 கிடைக்கும், விவரம் இதோ title=

பிஎஃப் வட்டி: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதன் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க உள்ளது. விரைவில் ஊழியர்கள் தங்கள் கணக்கில் 40 ஆயிரம் ரூபாயைப் பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கள் கணக்கில் 5 லட்சம் ரூபாய் கொண்டுள்ள பிஎஃப் கணக்குதாரர்களுக்கு அவர்களது கணக்கில் ரூ.40 ஆயிரம் வட்டி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கில் பணம் வந்ததா இல்லையா என்பது பற்றிய தகவல்களை வீட்டில் அமர்ந்தபடியே சந்தாதாரர்கள் தெரிந்துகொள்ளலாம். 

பணத்தை விரைவில் கணக்கிற்கு மாற்றலாம்:

நாட்டின் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் சொந்த பிஎஃப் கணக்கை வைத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் ஒவ்வொரு மாதமும் பங்களிக்கிறார்கள். உங்கள் சம்பளத்தில் இருந்து பிஎஃப் தொகை கழிக்கப்பட்டால், விரைவில் ஒரு பெரிய தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது நாடு முழுவதும் 6 கோடி ஊழியர்களின் பிஎஃப் கணக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நன்மையை யார் பெறுவார்கள்:

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) மிக விரைவில் PF வட்டி பணத்தை ஊழியர்களின் கணக்கிற்கு மாற்றும். பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்ட ஊழியர்கள், 40 ஆயிரம் ரூபாயை வட்டியாகப் பெறலாம். வட்டி தொகை விரைவில் பிஎஃப் கணக்கிற்கு மாற்றப்படும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | EPFO முக்கிய தகவல்: இதை செய்யாவிட்டால் பெரிய இழப்பீடு செலுத்தவேண்டும்!!

வீட்டில் இருந்தபடியே பிஎஃப் கணக்கு இருப்பை செக் செய்வதற்கான செயல்முறை: 

- பிஎஃப் கணக்கின் இருப்பை செக் செய்ய, முதலில் epfindia.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

- பின்னர் ‘உங்கள் EPF இருப்பை அறிய இங்கே கிளிக் செய்யவும்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- இதற்குப் பிறகு, வழிமாற்று இணைப்பு (ரீடைரக்ட் லிங்க்) மூலம், epfoservices.in/epfo/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

- அங்கு 'உறுப்பினர் இருப்புத் தகவல்' (’member balance information’) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

- பின்னர் பிஎஃப் கணக்கு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை அங்கு உள்ளிட வேண்டும்.

- இதற்குப் பிறகு, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் மாநிலத்தின் EPFO அலுவலகத்தின் இணையதள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

- இறுதியாக, 'சமர்ப்பி' (‘Submit’) விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- இந்த செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் PF கணக்கு இருப்பை திரையில் பார்க்க முடியும்.

மேலும் படிக்க | PF Account: பாலன்ஸ் செக் செய்வது மிக எளிது, இதை மட்டும் செய்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News