நியூடெல்லி: இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும். இதில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ரயில்வே தனது பயணிகளுக்கு பல்வேறு வகையான பெட்டிகளில் பல்வேறு வசதிகளை வழங்குகிறது, அதற்கேற்ப அவர்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இருப்பினும், ரயில்களின் பயணத்தில் சில சிறப்பு நபர்களுக்கு ரயில்வே தள்ளுபடி வழங்குகிறது.
ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் முதல் நோயாளிகள் வரை ரயில்வே பல சலுகைகளை வழங்குகிறது. பயணிகளில் பலர், சில வகையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கும் ரயில் டிக்கெட்டுகளிலும் தள்ளுபடி உண்டு. ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி பெறுபவர்களின் முழுமையான பட்டியலைத் தெரிந்துக் கொள்வோம்.
ரயில் டிக்கெட்டில் சலுகை பெறுபவர்கள்
மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், முற்றிலும் பார்வையற்ற பயணிகள், மற்றொரு நபரின் உதவியில்லாமல் பயணிக்க முடியாதவர்களுக்கு என பல்வேறுவிதமான மக்களுக்கும் ரயில் டிக்கெட்டுகளில் ரயில்வே சலுகை வழங்குகிறது.
இந்த பட்டியலில் வருபவர்களுக்கு பொது வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் 3ஏசியில் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பயணிகளுக்கு 1ஏசி, 2ஏசியில் 50 சதவீதம் தள்ளுபடியும், ராஜதானி, சதாப்தி போன்ற ரயில்களின் 3ஏசி மற்றும் ஏசி நாற்காலி காரில் 25 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும். இந்த சலுகையை பெறும் தகுதியுள்ளவர்களுடன், அவர்களுக்கு உதவி செய்வதற்காக உடன் செல்லும் ஒருவருக்கும், இந்த கட்டண தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் படிக்க | Indian Railways: பயணத்தில் லக்கேஜ் தொலைந்தால் கவலை வேண்டாம், இப்படி திரும்ப பெறலாம்
பேச முடியாதவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் 50 சதவீதம் சலுகை உண்டு. அத்தகைய நபருடன் செல்லும் எஸ்கார்ட் பயணிக்கும் ரயில் டிக்கெட்டுகளில் அதே தள்ளுபடி கிடைக்கும்.
நோயாளிகளுக்கு ரயில் பயணச்சீட்டில் தள்ளுபடி
பல நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும், ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி பெறுகிறார்கள். இதில், புற்றுநோய், தலசீமியா, இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், ஹீமோபிலியா நோயாளிகள், காசநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், ஆஸ்டோமி நோயாளிகள், இரத்த சோகை நோயாளிகள், அப்லாஸ்டிக் அனீமியா நோயாளிகள் ஆகியோருக்கும் ரயில் டிக்கெட்டில் சலுகை உண்டு.
நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர் என்றால், மற்றுமொரு செய்தியும் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். ரயிலில் பயணிப்பவர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் மற்றொரு விஷயம், ரயில் கட்டணத்தை 25 சதவீதம் வரை குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது தான்.
அனைத்து ரயில்களின் ஏசி நாற்காலி வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் கட்டணம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் சில வாரஙக்ளுக்கு முன் பிறப்பித்த உத்தரவில், வந்தே பாரத் அதிவேக ரயிலின் கட்டணத்தை குறைப்பது தொடர்பாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.
சில வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் காலியாக உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒப்பீட்டளவில் குறுகிய வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ