ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்; வெளியான முக்கிய தகவல்

Ration Card Latest News: கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழகங்கும் காலம் அதிகரித்ததை அடுத்து, தற்போது தகுதியுள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 கிலோ ரேஷன் பொருட்கள் இலவசமாக கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2022, 11:58 AM IST
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி
  • ரேஷன் கார்டு பயனாளிகள் பலன் அடைவார்கள்
  • இலவச பருப்புகள், தால் மற்றும் உப்பு
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்; வெளியான முக்கிய தகவல் title=

புது டெல்லி: Ration Card Latest News: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை இலவச ரேஷன் பெறுகிறார்கள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Garib Kalyan Yojana: PMGKY) கீழ் மார்ச் 2022 வரை இலவச ரேஷன் விநியோகம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

தற்போது, 150 மில்லியனுக்கும் அதிகமானோர் உத்தரப்பிரதேசத்தில் இரட்டிப்பு அளவில் ரேஷன் பொருட்கள் (Ration Card) பெற்று வருகின்றனர். இதன் முழு விவரத்தை கீழே விரிவாக காண்போம்.

ALSO READ | No more Farm Laws: நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தயார்

இலவச இரட்டிப்பு ரேஷன்
கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் (Pradhan Mantri Garib Kalyan Yojana: PMGKY) இலவச உணவு தானியங்கள் வழகங்கும் காலம் அதிகரித்ததை அடுத்து, தற்போது தகுதியுள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 கிலோ ரேஷன் பொருட்கள் இலவசமாக கிடைக்கும். தற்போது பயனாளிகள் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை கோதுமை மற்றும் அரிசி நன்மை பெறுவார்கள். இதனுடன் சேர்ந்து, எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும்.

ஏழைகளுக்கு இந்த திட்டத்தின் நன்மைகள் ஏராளம் 
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பின்னர், பொருளாதார ரீதியாக பலவீனமான ஏழை, தொழிலாளர்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அரசாங்கம் உயதாவி வருகின்றது. PMGKY திட்டம் நவம்பர் மாதம் முடிவடையும், ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் யோகி அரசாங்கம் ஹோலி வரை இந்த சிறப்பு இலவச ரேஷன் விநியோகத்தை அறிவித்துள்ளது. 

கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்
பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. வழக்கமான மானிய விலையுடன் கிடைக்கும் உணவு தானியத்துடன், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | இலவச அரிசி, கோதுமை நவம்பர் 30ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது: மத்திய அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News