இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ துறை தன் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.
இதன் கீழ், இபிஎஃப் கணக்கிலிருந்து எல்ஐசியின் பிரீமியத்தை கட்டும் வசதி பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த விதி மாற்றம் மக்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கும்.
பணத்தை எடுப்பதற்கான செயல்முறை என்ன? நிபந்தனைகள் என்ன?
பிஎஃப்-லிருந்து பணம் எடுத்து, எல்ஐசி-யில் பிரீமியம் செலுத்த, இபிஎஃப்ஓ-வின் புதிய நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கு உறுப்பினர்கள் முதலில் இபிஎஃப்ஓ-ன் படிவம் 14 ஐ சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு, எல்ஐசியின் பாலிசி மற்றும் இபிஎஃப்ஓ கணக்கு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், அதன் மூலம் எல்ஐசியின் பிரீமியத்தை செலுத்த முடியும்.
இரண்டாவது நிபந்தனை
நீங்கள் இபிஎஃப்ஓ-ன் படிவம் 14 ஐ நிரப்பும்போது, உங்கள் கணக்கில் குறைந்தது இரண்டு மாத பிரீமியம் தொகை இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | EPFO அளிக்கும் அசத்தல் வாய்ப்பு: இதில் பதிவு செய்தால் லாபம் காணலாம்
மூன்றாவது நிபந்தனை
எல்ஐசி-யின் பாலிசிக்காக மட்டுமே இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுள்ளது. இந்த வசதி மற்ற நிறுவனங்களுக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு எந்த பாலிசியிலும் இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
இபிஎஃப்ஓ மற்றொரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது
இபிஎஃப்ஓ-ன் புதிய விதிகளின் கீழ், உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், பிஎஃப்-லிருந்து ஒரு லட்சம் ரூபாய் எடுக்க இபிஎஃப்ஓ அனுமதிக்கும். இந்தச் செயல்பாட்டில் நீங்கள் எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR