புதன் பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

புதனின் ராசி மாற்றம் 12 ராசியில் சுப மற்றும் அசுப பலன்களை தரலாம். புதன் பெயர்ச்சி செய்வதால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயமும், சில ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு வாய்ப்பும் உண்டாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2022, 08:40 AM IST
  • புதன் பெயர்ச்சி நல்ல பலன் தரும்
  • ஏப்ரல் 25ம் தேதி வரை மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ளார் புதன்
  • வணிகத்தில் வெற்றியை பெற உறுதுணையாக இருக்கும் கிரகம்
புதன் பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் title=

கிரக பெயர்ச்சிகள் இயற்கையான ஒன்று. அந்த கிரகங்களின் அமைப்பைப் பொறுத்து ஒவ்வொரு ராசிக்கான கோள்சார பலன்கள் மாறும். புதன் பகவான் சம ஸ்தானமான செவ்வாய் ஆளக்கூடிய மேஷ ராசிக்கு ஏப்ரல் 8ம் தேதி பெயர்ச்சி ஆகியுள்ளார். தற்போது ஏப்ரல் 25ம் தேதி வரை மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ள புதன் குறிப்பிட்ட ராசியினருக்கு சில அற்புத பலன் தர உள்ளார். ஒருவருக்கு பகுத்தறிவு, கல்வி, எழுத்து, பேச்சாற்றல், புத்திசாலித்தனத்தைத் தரக்கூடியதும், சிறப்பான சிந்தனையால் தன் தொழில், வணிகத்தில் வெற்றியை பெற உறுதுணையாக இருக்கும் கிரகம் புதன் பகவான்.

என்வே ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நல்ல பலன் தரும். புதனின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்-

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

மேஷம் - புதன் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டு வரும். புதன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது பணம் மற்றும் பேச்சு இடம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் முடியும். உங்கள் மூன்றாவது மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி புதன். அதனால் உங்கள் பலம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் நன்மை பயக்கும். புதன் உங்கள் 11வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது வருமானம் மற்றும் தொழில் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலில் வெற்றி பெறலாம். தாயுடன் உறவு மேம்படும். சக்தி பெருகும். எதிரிகளை வீழ்த்தி  வெற்றி பெறுவார்கள்.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் ராசி மாறிய பலன் கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது தொழில் மற்றும் வேலை இடம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கூடும். வியாபாரம் விரிவடையும். இந்த நேரத்தில் உங்கள் பணி நடை மேம்படும். அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெறலாம். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சிக்கிய பணத்தை மீட்டெடுக்க வாய்ப்பு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News