பொதுவாக பெண்கள் மத்தியில் தங்க நகைகள் வாங்கும் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும். அதிலும் தென்னிந்தியாவில் நகைகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. திருமணம் மட்டுமல்லாது, பிற சடங்குகளிலும், தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது எனலாம்.
உங்களிடம் ஹால்மார்க் இல்லாத தங்கம் இருந்தால், அதனை இப்போது பரிசோதித்து அறிந்து, ஹார்மார்க் சான்றிதழ் பெறலாம். தங்கத்தின் தரநிலையை சோதிப்பது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை, பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் எனப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தின் (பிஐஎஸ்) அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்களில் பரிசோதனை செய்து அதன் தரத்தை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் உள்ளதா? ₹10 லட்சம் வரை அள்ளலாம்!
அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் '4 தங்க ஆபரணங்களை சோதனை செய்ய கட்டணம் ரூ.200. அதேசமயம், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நகைகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.45 கட்டணம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது கட்டாய ஹால்மார்க்கிங் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அதில் தினமும் 3 லட்சம் தங்கப் பொருட்களுக்கு HUID (ஹால்மார்க் தனித்துவ அடையாளம்) சான்றிதழ் அளிக்கப்படுவதாகவும் நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் தனது ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை தூய்மையை பரிசோதிக்க, BIS-அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களில் (AHC) பரிசோதிக்கலாம்.
நுகர்வோருக்கு வழங்கப்படும் தங்கத்தின் தர நிலை குறித்த அறிக்கை மூலம் நகைகளின் தூய்மை குறித்து அறிந்து கொள்ள முடிவதோடு, நுகர்வோர் தன்னிடம் இருக்கும் நகைகளை விற்க விரும்பினாலும் இந்த சான்றிதழ் பயனுள்ளதாக இருக்கும். நுகர்வோருக்கு வழங்கப்படும் HUID எண்ணுடன் ஹால்மார்க் சான்றிதழ் வழங்கப்படும். ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் BIS Care App - 'Verify HUID'-ஐப் பயன்படுத்தி தங்க நகைகளின் நம்பகத்தன்மை மற்றும் தூய்மையை சரிபார்க்கலாம்.
மேலும் படிக்க | ஆன்லைனில் ₹10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் காயின்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR