Gold rates today, 31 July 2021: உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.21 குறைந்து ஒரு கிராம் ரூ.4548-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ. 4569-க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 168 ரூபாய் குறைந்து ரூ. 36,384-க்கு விற்பனையில் உள்ளது.
தமிழகத்தின் பிற முக்கிய மாவட்டங்களான கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் தங்கத்தின் விலை ரூ. 4548 ஆக உள்ளது.
வெள்ளியின் விலையிலும் (Silver Rate) இன்று லேசான சரிவு காணப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் குறைந்து ரூ.73.00-க்கு விற்பனையில் உள்ளது.
ALSO READ: Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும்
தேசிய அளவில் தங்கத்தின் விலை (Gold Rate) இன்று 22 கேரட் 10 கிராமுக்கு ரூ .10 அதிகரித்துள்ளது. அதே போல் 24 கேரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை ரூ .47,380 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை ரூ .48,380 ஆகவும் உள்ளது.
மும்பையில் 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .47,390 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை ரூ .48,390 ஆகவும் உள்ளது. டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ .47,410 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை ரூ .51,720 ஆகவும் உள்ளது.
கொல்கத்தாவில், 10 கேரட் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ .47,410 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை ரூ .50,110 ஆகவும் உள்ளது.
கேரளாவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 45,260 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை ரூ .49,380 ஆகவும் உள்ளது. பெங்களூருவில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .49,380 ஆகவும், 24 காரட் ரூ .49,380 ஆகவும் இருந்தது.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.
ALSO READ: Incredible Dress! 100 கிலோ தங்கத்தால் நெய்யப்பட்ட அற்புத திருமண ஆடை; வீடியோ வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR