Sukanya Samriddhi Yojana: தினம் ₹416 முதலீட்டில் ₹65 லட்சம் அள்ளலாம்!

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் என்பது மகள்களின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்காக மத்திய அரசால் நடத்தப்படும் திட்டமாகும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 9, 2022, 12:52 PM IST
  • சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
  • ஒரு நாளைக்கு 416 ரூபாய் சேமித்து 65 லட்சம் பெறலாம்.
  • நீங்கள் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.
Sukanya Samriddhi Yojana: தினம் ₹416 முதலீட்டில் ₹65 லட்சம் அள்ளலாம்! title=

சுகன்யா சம்ரித்தி யோஜனா: ஒரு மகளின் தந்தையாக, இந்தப் புத்தாண்டில் உங்கள் மகளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க நிலைத்தால், சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் ஒரு நாளைக்கு 416 ரூபாய் மட்டுமே சேமித்து உங்கள் மகளுக்கு 65 லட்ச ரூபாய் கிடைக்க வழி செய்யலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றால் என்ன?

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது நீண்ட கால திட்டமாகும், இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து கவலை இல்லாமல் இருக்க முடியும். இதற்காக நீங்கள் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். 

பெண் குழந்தைகளுக்கான அரசின் சிறந்த திட்டம்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் அரசின் பிரபலமான திட்டம் இது. சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் 10 வயது வரையிலான மகளின் கணக்கைத் திறக்கலாம். இதில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மகளுக்கு 21 வயதாகும் போது இந்தத் திட்டம் முதிர்ச்சியடையும். இருப்பினும், மகளுக்கு 18 வயது ஆகும் வரை இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட முதலீட்டை எடுக்க முடியாது. 18 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தத் திட்டத்திலிருந்து மொத்தத் தொகையில் 50% திரும்பப் பெறலாம். அதை அவள் பட்டப்படிப்பு அல்லது மேல் படிப்புக்கு பயன்படுத்தலாம். இதற்குப் பிறகு, அவளுக்கு 21 வயது இருக்கும் போது மட்டுமே எல்லாப் பணத்தையும் திரும்பப் பெற முடியும்.

ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு

15 ஆண்டுகளுக்கு மட்டுமே பணம் டெபாசிட் செய்யப்படுகிறது

இந்த திட்டத்தின் சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் 21 வருடங்கள் முழுவதும் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டியதில்லை, கணக்கு துவங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும், அதே சமயம் மகளின் 21 வயது வரை அந்த பணத்திற்கு வட்டி தொடர்ந்து வரும். தற்போது இதற்கு ஆண்டுக்கு 7.6% வட்டி வீதம் அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை வீட்டின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு திறக்கலாம். இரட்டையர் இருந்தால், 3 மகள்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

முதலில் உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது உங்களுக்கு எவ்வளவு தொகை தேவை என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் இந்தத் திட்டத்தைத் தொடங்குகிறீர்களோ, அந்த அளவு முதிர்ச்சியின் போது உங்களுக்கு அதிகத் தொகை கிடைக்கும்.

உங்கள் மகளுக்கு இன்று 10 வயதாகி, இன்று முதலீடு செய்யத் தொடங்கினால், 11 வருடங்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும், அதேபோல் உங்களுக்கு 5 வயது மகள் இருந்தால் முதலீடு செய்யத் தொடங்கினால் 16 வருடங்கள் முதலீடு செய்யலாம்.  அதனால் முதிர்வு தொகை அதிகரிக்கும். உங்கள் மகளுக்கு இன்று 2021 இல் 1 வயது ஆகி, நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கினால், அது 2042  முதிர்ச்சியடையும். மேலும் இந்த திட்டத்தின் அதிகபட்ச பலனை நீங்கள் பெறலாம்.

ரூ.416 முதலீட்டில் 65 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி

1. நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கும் போது, உங்கள் மகளின் வயது 1  வயது என எடுத்துக் கொள்வோம்

2. இப்போது நீங்கள் ஒரு நாளைக்கு ரூ. 416 சேமித்தால்,  மாதம் ரூ.12,500 என்ற அளவில் தொகை இருக்கும்.

3. ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 டெபாசிட் செய்யப்பட்டால், ஒரு ஆண்டில் ரூ.1,50,000 டெபாசிட் செய்யப்படுகிறது.

4. இந்த முதலீட்டை 15 வருடங்கள் மட்டுமே செய்தால், மொத்த முதலீடு ரூ.22,50,000

5. ஆண்டுக்கு 7.6%, நீங்கள் பெற்ற மொத்த வட்டி ரூ 42,50,000

6. உங்கள், மகளுக்கு 21 வயதாகும்போது, ​​திட்டம் முதிர்ச்சியடையும் அந்த நேரத்தில் மொத்த முதிர்வுத் தொகை ரூ.6,500,000 ஆக இருக்கும்.

ஒரு நாளைக்கு வெறும் 416 ரூபாய் சேமிப்பதன் மூலம் உங்கள் மகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றலாம். ஒவ்வொரு முதலீட்டின் அடிப்படை மந்திரம், அதிக பட்ச பலனை பெற முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்பது தான். இந்தத் திட்டத்தை எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாகப் பயனடைவீர்கள்.

ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News