Ezharai shani: சிவபெருமானின் பக்தன் சனீஸ்வரரின் அருட்பார்வை பெறும் வழிகள்

கர்ம பலனை கொடுத்து நீதியை நிலை நாட்டினாலும், குருவான சிவனுக்கு கட்டுப்படும் சனியின் கோபத்தை மட்டுப்படுத்தும் சுலப வழிகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 26, 2022, 05:43 AM IST
  • சனீஸ்வரரின் குரு சிவபெருமான்
  • ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனீஸ்வரர்
  • சிவனை வணங்கினால் சனி குளிர்வார்
Ezharai shani: சிவபெருமானின் பக்தன் சனீஸ்வரரின் அருட்பார்வை பெறும் வழிகள் title=

புதுடெல்லி: நீதியின் அதிபதி சனீஸ்வரர் ஏப்ரல் மாதம் ராசியை மாற்றப் போகிறார். சனிபகவான் ராசி மாறி கும்ப ராசிக்கு செல்வார். அத்தகைய சூழ்நிலையில், ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்கும் ஏழரை நாட்டு சனியின் தாக்கமும், பாதிப்பும் ராசிக்கு ராசி மாறுபடும்.

சனிக்கிழமையன்று சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வதன் மூலம், சனீஸ்வரரின் பார்வையில் இருக்கும் ராசிக்காரர்கள், பாதிப்பை குறைக்கலாம்.  

சனி யந்திர வழிபாடு
சனி யந்திரத்தை வழிபட்டால் சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம். இதற்கு, சனிக்கிழமையன்று குளித்த பின், சுத்தமான கருப்பு நிற ஆடைகளை அணியவேண்டும். அதன் பிறகு, பக்தி சிரத்தையாக சனீஸ்வராஇ வணங்க வேண்டும்.

சனி யந்திரத்தை வழிபடுவது சிறப்பு. இவ்வாறு செய்வதன் மூலம் வேலை, வியாபாரம், பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க | ஏழரை சனியின் வகைகளும் அவற்றின் பாதிப்பிற்கு பரிகாரங்களும்.

சிவபெருமானின் வழிபாடு
சாஸ்திரங்களின்படி, சிவபெருமான் சனியின் குரு ஆவார். குருவை வணங்கினால், பக்தரின் அருளாசியும் கிடைக்கும். எனவே சனிக்கிழமையன்று சிவனை வழிபடுவது சனிபகவானின் ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறது.

இது தவிர அனுமாரை சனிக்கிழமையன்று வழிபட்ட்டால், சனீஸ்வரரின் அருட்கடாட்சம் கிடைக்கும். 

சனிக்கிழமையன்று அனுமாருக்கு வடை மாலை சாற்றுவதன் மூலம் சனீஸ்வரரின் ஏழரை நாட்டு தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். 

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனி, சீரழிய போகும் ராசிக்காரர்கள்

எண்ணெய் தானம்
சனிக்கிழமைகளில் எள் அல்லது கடுகு எண்ணெயை தானம் செய்தால் சனியின் கோபம் குறையும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமையன்று கருப்பு நாய்க்கு கடுகு எண்ணெயை கொடுத்தால் செல்வம் பெருகும்.

அதுமட்டுமின்றி, சனிக்கிழமையன்று, சனீஷ்வரருக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றினால், சனி தோஷம் நீங்கும்.

நல்லெண்ணெயை தானமாக கொடுப்பதும் நல்லது. சனிக்கிழமையன்று நல்லெண்ணையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் முகம் பார்த்துவிட்டு, அந்த எண்ணெயை தானமாக கொடுப்பது சனீஸ்வரரின் அருளை பூரணமாக கிடைக்கச் செய்யும்.

இந்த ஆண்டு சனீஸ்வர பகவானின் முக்கியமான பெயர்ச்சிகள்

29 ஏப்ரல் 2022 அன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாக உள்ளார்.

2022 ஜூன் மாதம் ஐந்தாம் தேதியன்று சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார்.

2022 ஜூலை 12ம் நாளன்று சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சியாக மகரத்தை அடைவார்.

23 அக்டோபர் 2022 அன்று சனி மகரத்தில் மீண்டும் நேரிடையாக பெயர்ச்சி அடைவார்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ மீடியா அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 2 ராசிக்காரர்கள் இன்று எதிலும் கவனம்; நிதானமாக செயல்பட வேண்டும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News