மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க... ‘இந்த’ விளக்குகள் கை கொடுக்கும்!

மின்சாரத்தை சேமிக்க சில குறிப்பட்ட விளக்குகளை பொறுத்துவது மிகவும் பயன் தரும். இதனால், மின் கட்டணத்தை பெருமளவு குறைக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 19, 2023, 02:42 PM IST
  • ஏசி அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக குளிர்காலத்தை விட கோடை காலத்தில் பில் அதிகமாக வரும்.
  • மின்சார சேமிப்பை வலியுறுத்தும் மத்திய, மாநில அரசுகள்.
  • சூரிய ஒளியில் இயங்கும் விளக்கின் நன்மைகள்.
மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க... ‘இந்த’ விளக்குகள் கை கொடுக்கும்! title=

கோடைக்காலத்தில் மின்சாரக் கட்டணம் எத்தனை வருமோ என  பதற்றம் யாரையும் தூங்கவிடாமல் செய்யும். ஏசி, கூலர், ஃப்ரீஸ் தவிர இதுபோன்ற பல எலக்ட்ரானிக் பொருட்கள் வீட்டில் இருப்பதால் அதிக மின்சாரம் செலவாகிறது. இப்போது மின் கட்டணம் வேறு அதிகரித்துள்ள நிலையில், மின்சார கட்டணம் ஷாக் அடிக்கமால் இருக்க, சில குறிப்பட்ட விளக்குகளை பொறுத்துவது மிகவும் பயன் தரும். இதனால், மின் கட்டணத்தை பெருமளவு குறைக்கலாம்.

ஏசி அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக குளிர்காலத்தை விட கோடை காலத்தில் பில் அதிகமாக வரும். இதன் காரணமாக, பொதுவான குடும்பங்களின் பட்ஜெட்டில் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டில் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலான விளக்கு நிறுவப்பட வேண்டும். இது உங்கள் மின்சாரத்தை பயன்படுத்தாமலேயே வீட்டிற்கு ஒளியை வழங்க கூடியது.

மேலும் படிக்க | தங்க நகைகள் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இத மட்டும் பண்ணுங்க போதும்!

சோலார் LED  விளக்கு: மின் கட்டணம்  டென்ஷன் இருக்காது

மேலே குறிப்பிட்டுள்ளபடி, உங்கள் வீட்டில் ஒளியை கொடுக்கக் கூடிய, அதே சமயத்தில் மின் கட்டணம் மூலம் ஷாக் கொடுக்காத ஒரு விளக்கை நிறுவ வேண்டும் என்றால், உங்கள் வீட்டில் சோலார் எல்இடி விளக்குகளை நிறுவலாம். இந்த விளக்கை நிறுவிய பிறகு, உங்கள் மின் கட்டணத்தின் பதற்றம் பாதியாகக் குறையும். நீங்கள் இந்த விளக்கை வாங்க விரும்பினால், அதை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் வாங்கலாம். ஆனால் நீங்கள் ஆன்லைனில் வாங்கினால், இந்த விளக்குகளில் பெரிய தள்ளுபடியைப் பெறலாம். இந்த விளக்குகளுக்கு ஆன்லைனில் கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றி இங்கே கூறுவோம்.

ஹோம்ஹாப் சோலார் LED விளக்குகள்:

சோலார் LED லைட்டின் அசல் விலை ரூ.2996 என்றாலும், இ-காமர்ஸ் தளத்தில் ரூ.1,699க்கு 43 சதவீத தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த விளக்கு உங்கள் வீட்டிற்கு வெளிச்சம் தரும். ஆனால் மின் கட்டணம் வராது என்பது தான் இந்த விளக்கின் சிறப்பம்சம். ஒருமுறை 6-8 மணிநேரம் சார்ஜ் செய்தால், 2 நாட்கள் பேட்டரி பேக் அப் கிடைக்கும்.

LED சோலார் டெக் விளக்குகள்:

சோலார் டெக் விளக்கு ரூ.1,299க்கு 74 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, EMI விருப்பமும் இதில் கிடைக்கிறது. சூரிய ஒளியில் இயங்கும் விளக்கினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்பதால், பலர் இதனை இபோது பயன்படுத்தி வருகின்றனர்.

சோலார் எமர்ஜென்சி விளக்குகள்

சோலார் எமர்ஜென்சி விளக்குகள் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதி மூலம் இந்த விளக்குகள் அவசரகால சூழ்நிலைகளில் உபயோக்கவும் மிகவும் உகந்ததாக இருக்கும். ஒரு முறை சர்ஜ் செய்தால் குறைந்தது 5 முதல் 7 மணி நேரம் வரை இயங்க உதவுகிறது. சோலார் எமர்ஜென்சி லைட் என்பது ஒரு பயனர் எளிதில் உபயோகிக்கக் கூடிய அசங்களை கொண்டது. மேலும் எளிதாக இயக்கம் முடியும்.

அரசின் திட்டங்கள்

மேலும் மின்சார சேமிப்பை வலியுறுத்தும் மத்திய, மாநில அரசுகளின், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின்கீழ், கிராம ஊராட்சிகளில்  சோலார் எரிசக்தி எனும் சூரிய ஆற்றலை பயன்படுத்தும் வகையில் விளக்குகலை பொருத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஊழியர்களுக்கு 2 மாஸ் செய்திகள்..... அடிச்சது ஜாக்பாட்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News