கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு சில எளிய வழி முறைகள்...

நம் வீட்டின் அழைக்கப்படாத விருந்தினர்களான கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு சில எளிய வழி முறைகள் இந்த பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

Last Updated : May 19, 2020, 02:53 PM IST
கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு சில எளிய வழி முறைகள்... title=

நம் வீட்டின் அழைக்கப்படாத விருந்தினர்களான கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு சில எளிய வழி முறைகள் இந்த பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் வந்துவிட்டது, கரப்பான் பூச்சிகள் இந்த நேரத்தில் நமது வீட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கலாம். இந்த அழைக்கப்படாத விருந்தினர்கள் முழு வீட்டின் மூலைகளிலும் காணப்படுகின்றனர். சமையலறையிலிருந்து குளியலறை வரை ஆட்சி செய்கிறது. இந்த கரப்பான் பூச்சிகளை நம் வீட்டில் இருந்து விரட்ட சில வழிமுறைகளை நாம் இன்று பார்ப்போம்.

1. கறிவேப்பிலை இலைகள் - உங்கள் வீட்டில் அதிக அளவு கரப்பான் பூச்சிகள் இருந்தால் கறிவேப்பிலை பயன்படுத்துங்கள். கறிவேப்பிலையின் வாசனை காரணமாக கரப்பான் பூச்சிகள் அதன் அருகே வராது, எனவே கரப்பான் பூச்சிகள் இருக்கும் வீட்டின் மூலையில், கருவேப்பிலை இலைகளின் சில இலைகளை வைத்துவிடுங்கள்.

2. பேக்கிங் பவுடர் மற்றும் சர்க்கரை கலவை - இந்த கலைவையை தயாரிக்க ஒரு பாத்திரத்தில் சம அளவு பேக்கிங் பவுடர் மற்றும் சர்க்கரை கலந்து வீட்டில் அதிக அளவு கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் தெளிக்கவும்.

3. கிராம்பு வாசனை - கரப்பான் பூச்சிகளை விரட்ட கிராம்பு ஒரு நல்ல தீர்வாகும். சமையலறை இழுப்பறைகளில் சில கிராம்பு மொட்டுகளை வைத்து அறை அலமாரிகளை நாம் பாதுகாக்கலாம். அவ்வாறு பயன்படுத்துவதால் கரப்பான் பூச்சிகள் அலமாரிகளின் அருகே வராமல் ஓடிவிடும்.

4. போராக்ஸ் - கரப்பான் பூச்சி எங்கிருந்து வருகிறது என்று பார்த்து அங்கு போராக்ஸ் பொடியை தெளிக்கவும். இதைச் செய்வதன் மூலம் கரப்பான் பூச்சிகள் அந்த இடத்தில் இருந்து ஓடிவிடும். அதேவேளையில் போராக்ஸ் பவுடர் குழந்தைகளுக்கு கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. மண்ணெண்ணெய் - கரப்பான் பூச்சி வரும் இடத்தில் மண்ணெண்ணெய் தெளியுங்கள், ஏனெனில் எண்ணெயின் வாசனை கரப்பான் பூச்சிகளை வெளியேறத் தொடங்குகிறது.

Trending News