வெயிட் லாஸ் முதல் செரிமானம் வரை.. இந்த மசாலா பொருட்கள் இருந்தால் போதும்

Fenugreek Seeds And Cinnamon Benefits: வெந்தயத்தையும் இலவங்கப்பட்டையையும் ஒன்றாக கலந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதன் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 20, 2024, 05:58 PM IST
  • உடலில் சேரும் அழுக்குகளை அகற்றும்.
  • அதிக கொலஸ்ட்ராலில் நன்மை பயக்கும்.
  • செரிமான பிரச்சனைகளில் நன்மை பயக்கும்
வெயிட் லாஸ் முதல் செரிமானம் வரை.. இந்த மசாலா பொருட்கள் இருந்தால் போதும் title=

வெந்தய விதைகள் மற்றும் இலவங்கப்பட்டையின் நன்மைகள்: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை இருக்க வேண்டியது அவசியமாகும். உங்கள் உணவுப் பழக்கம் சரியாக இல்லையென்றால், அது உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். முந்தைய காலங்களில், மக்கள் இயற்கை மற்றும் ஆயுர்வேத பொருட்களை உட்கொண்டார்கள். இதன் மூலம் அவர்களது உடல் எப்போதுமே ஆரோக்கியமாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் தவறான உணவுப் பழக்கத்தின் காரணமாக மக்கள் பல நோய்களுக்கு ஆளாகுகின்றனர். இந்தியாவில் கிடைக்கும் மசாலா மற்றும் இயற்கை பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இவற்றை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அப்படிப் பட்ட மசாலா பொருட்களில் ஒன்று தான் வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை ஆகும். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் பல நோய்கள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்நிலையில் வெந்தயத்தை மற்றும் இலவங்கப்பட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.

வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் எனன்? | Benefir of Eating Fenugreek Seeds And Cinnamon:

உணவின் சுவையை அதிகரிக்க, வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்கள் பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை இரண்டும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் உள்ள பண்புகளால் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை பல வகையான மருந்துகளை தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் குறிப்பாக வெந்தயத்தில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தவிர பல வகையான வைட்டமின்களும் உள்ளன. மறுபுறம் இலவங்கப்பட்டை நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், மாங்கனீசு, தாமிரம், வைட்டமின் பி6 போன்ற பண்புகளும் நிறைந்துள்ளது. வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டையில் உள்ள பண்புகள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | கால் கைகளில் இந்த அறிகுறிகள் இருக்கா? அலட்சியம் வேண்டாம்.. கொலஸ்ட்ரால் கூட இருக்கலாம்

வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டையை ஒன்றாக சேர்த்து உட்கொள்வது உடலுக்கு என்ன நன்மைகளை தரும்?

1. உடல் எடை குறைக்க உதவும்
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களால் உடல் பருமன் பிரச்சனையை மக்கள் சந்திக்கின்றனர். உடல் எடையை குறைக்க, வெந்தயத்தையும் இலவங்கப்பட்டையையும் சேர்த்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை தூள் தேநீர் அருந்தலாம்.

2. செரிமான பிரச்சனைகளில் நன்மை பயக்கும்
வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டையை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றில் வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதற்கு, வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் வெந்தயம் மற்றும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் கலந்து தினமும் காலையில் குடிக்கவும். இதைத் தொடர்ந்து செய்து வருவது நன்மை பயக்கும்.

3. உடலில் சேரும் அழுக்குகளை அகற்றும்
வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது உடலில் சேரும் அழுக்குகளை அகற்றுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது. வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால் உடலில் உள்ள அழுக்குகளை எளிதில் வெளியேற்றுவதுடன் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

4. அதிக கொலஸ்ட்ராலில் நன்மை பயக்கும்
உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் இடையூறுகளால், நீங்கள் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த, வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை தேநீர் அல்லது அதன் தண்ணீரைக் குடிப்பது நன்மை பயக்கும். இதை உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே கூடாது!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News