Weekly Horoscope: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

Weekly Horoscope: சிம்ம ராசிக்காரர்களுக்கு, வீட்டுன் வரவு செலவு விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2022, 05:47 AM IST
Weekly Horoscope: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் title=

Weekly Horoscope: 2022 ஆம் ஆண்டின் முதல் வாரம் சில ராசிக்கார்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த வாரம் கிரகங்களின் மாறம் ஏற்படப் போகின்றன. அதன்படி இந்த வார ராசிபலனின் மூலம், வரும் நாட்கள் யாருக்கு மகிழ்ச்சியை அளிக்கும், யாருடைய ஆசைகள் நிறைவேறாமல் போகும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) 03 ஜனவரி 2022 முதல்  09 ஜனவரி 2022 வரை நேரம் எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

மேஷம்: பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். சரியான உணவுப்பழக்கம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ALSO READ | இந்த 5 ராசிக்காரர்களுக்கு 2022ல் அற்புதமான பரிசு கிடைக்கும் 

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம் முன்பை விட சிறந்த சூழலை உருவாக்க முடியும். சமூகத்துடன் இணைந்திருக்கும் போக்கு உங்களுக்கு பல நண்பர்களையும் நலம் விரும்பிகளையும் வழங்கப் போகிறது. தொழில் ரீதியாக கிடைக்கும் வெற்றியால் உங்கள் புகழ் கூடும்.

மிதுனம்: எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் தற்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து செயல்படுவது அவசியம். பேரம் பேசி குறைந்த விலையில் எதையாவது வாங்கப் போகிறீர்கள். புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியும். காதல் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: இந்த வாரம் நகைக்கடைக்காரர்கள் அல்லது தங்கத் துறையில் வேலை செய்பவர்களின் வருமானம் உயரும். உங்களால் முடிக்கப்பட்ட எந்தவொரு பணியும் அல்லது திட்டமும் மூத்தவர்களை ஈர்க்க முடியாது.

சிம்மம்: வீட்டுன் வரவு செலவு விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்துவது உங்கள் முன்னுரிமையாக இருக்கும், எனவே சேமிக்கத் தொடங்குங்கள். 

கன்னி: தொழில் துறையில் வேலைக்காக முதுகில் தட்டுவது உங்களை சிறப்பாகச் செய்யத் தூண்டும். நீங்கள் விரும்பும் ஒருவரிடமிருந்து நேர்மறையான சமிக்ஞையைப் பெறலாம். மார்க்கெட்டிங் அல்லது சில்லறை வர்த்தகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றுவார்கள்.

துலாம்: இந்த வாரம் உங்கள் மனநிலை சில காரணங்களால் மோசமாக இருக்கலாம், ஆனால் உங்களைச் சுற்றியுள்ளவர்களை பாதிக்க விடமாட்டீர்கள். ஒரு சிறிய விஷயத்தில் எழுந்த தவறான புரிதல்களை சரியான நேரத்தில் அகற்றவும், இல்லையெனில் வீட்டின் சூழல் கெட்டுவிடும். 

விருச்சிகம்: வாழ்க்கையில் இதுவரை நீங்கள் கடந்து செல்லாத ஒரு அற்புதமான தருணத்தை நீங்கள் கடந்து வருகிறீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 

தனுசு: உங்களுக்கு நல்ல இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் ஒரு அற்புதமான வாரமாக இருக்கும். 

மகரம்: இந்த வாரம் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.  பணம் தேவைப்படலாம், கடன் வாங்குவது பற்றி யோசிக்கலாம். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் காணப்படும். 

கும்பம்: புத்திசாலித்தனமான வேலையின் மூலம் மூத்தவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சிப்பீர்கள். குடும்பத்தின் ஆதரவு, படிப்புத் துறையில் எந்தவொரு பெரிய நோக்கத்தையும் அடைவதில் உங்கள் நம்பிக்கையை வைத்திருக்கும்.

மீனம்: வெளிநாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் பல வாய்ப்புகள் கிடைக்கும். அரசுத் துறை தொடர்பான பணிகளில் மகிழ்ச்சிகரமான பலனை அடைவீர்கள். உரையாடலில் திறமையாக இருப்பதால் நீங்கள் மற்றவர்களுடன் நல்ல உறவை உருவாக்க முடியும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | LOVE HOROSCOPE 2022: இந்த 5 ராசிக்காரர்களுக்கும் 2022இல் அற்புதமான காதல் வாழ்க்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News