பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, கரன்சி நோட்டுகள் தொடர்பாக பல வகையான செய்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன. ஆனால் இப்போது பழைய 1000 ரூபாய் நோட்டு பற்றி முக்கிய செய்திகள் வருகின்றன. இந்த நோட்டை அரசு மீண்டும் அனுமதிக்கலாம் என செய்திகள் வந்து கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததன் மூலம் அரசாங்கம் நாட்டில் கறுப்பு பணத்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கையை எடுத்தது. கறுப்புப் பணத்தை சந்தையில் இருந்து அகற்றுவதற்காக, அத்தகைய நோட்டுகளை செல்லாது என அறிவிக்க மோடி அரசு முடிவு செய்திருந்தது, ஆனால் இப்போது அரசாங்கம் மீண்டும் 1000 ரூபாய் நோட்டை வெளியிடப் போகிறது என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.
1000 நோட்டை மீண்டும் வெளியிடலாம்
எந்த நோக்கத்திற்காக அரசு இந்த நோட்டுகளை செல்லாது என அறிவித்தததோ, அந்த நோக்கம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. தற்போது மீண்டும் 1000 ரூபாய் நோட்டை அரசு வெளியிடலாம் என செய்திகள் வருகின்றன. 2016-ம் ஆண்டு 1000 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்த அரசு 2000 ரூபாய் நோட்டை அரசு வெளியிட்டது. இந்நிலையில், 1000 ரூபாய் நோட்டை மீண்டும் வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பழைய ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்க இறுதி நாள் இதுதான்! காலக்கெடு நிர்ணயம் உண்மையா?
சந்தையில் இருந்து காணாமல் போகும் 2000 ரூபாய் நோட்டுகள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது, நோட்டுகளை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமப்பட்டனர். இந்த நேரத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் சந்தையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை
31 மார்ச் 2022 நிலவரப்படி, மொத்தம் 214.20 கோடி ரூபாய் 2,000 (2000 ரூபாய் நோட்டுகள்) புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை கூறுகிறது. இது மொத்த நோட்டுகளில் 1.6% ஆகும். அதன் மதிப்பைப் பார்த்தால், மொத்தம் ரூ.4,28,394 கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. மதிப்பின் அடிப்படையில், 13.8% நோட்டுகள் உள்ளன. மேலும், அது கண்ணில் பலடவில்லை என்பதற்காக, அது செல்லாததாக ஆக்கப்பட்டு விட்டதோ என கருத வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
2016ல் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன
நவம்பர் 8, 2016 அன்று, பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் பணமதிப்பு நடவடிக்கை அறிவித்தார். இதன் பின்னர், அன்றைய தினம் நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இருப்பினும், இதன் பின்னர் மக்கள் வங்கியில் இருந்து தங்கள் நோட்டுகளை மாற்ற அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க | Old Pension திட்டம் குறித்து மிகப்பெரிய அறிவிப்பு, உடனடியாக இதை படியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ