Zomoto-வில் உணவு விநியோகம் செய்யும் முதுகலை பட்டதாரி!

குற்றேவல் பணிகளுக்கு பட்டம் படித்தவர்களை பணியமர்த்துவதே தற்போதைய இந்தியாவின் நிலைமை...

Last Updated : Feb 12, 2019, 01:48 PM IST
Zomoto-வில் உணவு விநியோகம் செய்யும் முதுகலை பட்டதாரி! title=

குற்றேவல் பணிகளுக்கு பட்டம் படித்தவர்களை பணியமர்த்துவதே தற்போதைய இந்தியாவின் நிலைமை...

மேளாண்மை கல்வியின் நிபுனர் பட்டம் பெற்று, மளிகை கடையில் வேலை பார்ப்பது தற்போதைய இந்தியாவில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ஏன் இந்த அவலம்? பொறியல் பட்டம் பெற்று படித்த படிப்புக்கு வேலை இல்லாமல் கிடைத்த வேலையினை பார்க்கும் இளைஞர்கள் தான் எத்தனை நம் நாட்டில்...

ஏன் இந்த நிலைமை? இந்த நிலைமைக்க யார் தான் காரணம்?

போதுமான வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தவில்லை என நொடியில் அரசின் பக்கம் கையை நீட்டி காட்டிவிடலாமா? இல்லை, வேலை கிடைக்காது என தெரிந்தும் வராத படிப்பை பெற்றோருக்காக கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்ற இளைஞர்களின் பக்கம் கையை நீட்டி காட்டிவிடலாமா?... யார் பக்கம் சுட்டிக்காட்டி குற்றம்கூறினாலும், மறுபக்கம் குற்றம் இல்லை என கூறிவிட முடியாது. சமூகத்தில் நிலவும் இந்த அவல நிலைக்கு காரணம் நாம் ஒவ்வொருவரும் காரணம் தான்.

தற்போது இளைஞர்கள் விட்டு சென்றாலும், இளைஞர்களை விடமால் இருப்பது பொறியல் துறை படிப்புகள் தான். படிப்பின் மீது ஆர்வம் இருப்பதை காட்டிலும் துறையின் மீது இருக்கும் மோகம் மாணவர்களை பொறியல் என்னும் மாய ஆவி விழுங்கிவிடுகிறது. மாணவர்களை காட்டிலும் அவர்களது பெற்றோர்கள் மாய பேயின் வாயில் தங்கள் பிள்ளைகளை தள்ள காத்திருப்பது தான் வேடிக்கை. தம்பிள்ளைகளுக்கு உரிய படிப்பை வழக்க முற்படும் பெற்றோர்கள், ஏன் அதனை ஆழ்ந்து கவணித்து பின்னர் பரிந்துரைப்பதில்லை. பெற்றோரின் சரியான வழிகாட்டல் இருந்தால் ஒருவேலை மாணவர்கள் வேலை இல்லா பட்சத்திலும் சொந்த தொழில் செய்து முன்னேறும் அளவிற்கு பக்குவப்பட்டிருப்பார்களோ என்னவோ?...

சரி நாம் விஷயத்திற்கு வருவோம். சமீப காலமாக ஆன்லைன் புட் டெலிவரி என்னும் கலாச்சாரம் நாட்டை உலுக்கி வருகிறது. பல பிரபல நிறுவனங்கள் ஆன்லைன் உணவு விற்பனையினையும் விட்டு வைக்காமல் செம்மையாக செயல்படுத்தி வருகின்றனர். மேற்கூறப்பட்ட வேலையில்லா பொறியாளர்கள் பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ள பெருமை இந்த நிறுவனங்களுக்கு உண்டு.

இதனை உலகிற்கு பகிரங்கமாக தெரியப்படுத்தும் விதமாக தற்போது சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற வாலிபர் ஒருவர் 5,000 ரூபாய் சம்பளத்திற்கு உணவு விநியோகஸ்தராக பணிபுரியும் கொடுமையை உலகிற்கு வெளிகாட்டியுள்ள இந்த பதிவு இந்தியாவின் இயலாமை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளது.

Trending News