EPFO அளித்த பெரிய நிவாரணம்: உங்கள் விவரங்களை நீங்களே அப்டேட் செய்யலாம், விவரம் உள்ளே

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பழைய நிறுவனம் தகவல்களைப் புதுப்பிக்க உதவுவதில்லை. ஊழியர்களின் இந்த பிரச்சினை இப்போது மத்திய அரசால் தீர்க்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 11, 2021, 02:32 PM IST
  • PF கணக்கில் date of exit-ஐ ஊழியர்களே இனி அப்டேட் செய்து கொள்ளலாம்.
  • முன்னர் தகவலைப் புதுப்பிக்கும் உரிமை நிறுவனத்திடம் இருந்தது.
  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பழைய நிறுவனம் தகவல்களைப் புதுப்பிக்க உதவுவதில்லை.
EPFO அளித்த பெரிய நிவாரணம்: உங்கள் விவரங்களை நீங்களே அப்டேட் செய்யலாம், விவரம் உள்ளே  title=

EPFO News: இப்போது EPFO-வில் ​​கணக்கு வைத்திருக்கும் மக்களது பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவர்கள் இப்போது பணி மாற்றம் ஏற்படும்போது, வெளியேறிய நாள், அதாவது, date of exit-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். முன்னதாக, இந்த தகவலைப் புதுப்பிக்கும் உரிமை நிறுவனத்திடம் இருந்தது. இதன் காரணமாக, பி.எஃப் கணக்கைப் புதுப்பிக்க ஊழியர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த வழியில் புதுப்பிக்கலாம்

-கணக்கு வைத்திருப்பவர்கள் முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற போர்டலில் யுஐஎன் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.

-லாக் இன் செய்தவுடன், ‘manage’-ல் சென்று, ‘mark exit’-ல் கிளிக் செய்யவும்.

- இதன் பிறகு ‘select Employment’-லிருந்து பி.எஃப் கணக்கு எண்ணை தேர்ந்தெடுக்கவும்.

-இப்போது ‘வெளியேறும் தேதி’ மற்றும் ‘வெளியேறுவதற்கான காரணம்’ ஆகியவற்றில் கிளிக் செய்யவும்.

-இதன் பின்னர், ‘request OTP’-ல் கிளிக் செய்யவும்.

-ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் வந்த OTP ஐ உள்ளிடவும்.

- இப்போது செக் பாக்சை செலக்ட் செய்து, ‘update’ மற்றும் ‘ok’-வை கிளிக் செய்யவும்.  இது முடிந்தவுடன், உங்கள் வெளியேறும் தேதி புதுப்பிக்கப்படும்.

ALSO READ: 2 நாள் Bank Strike: எஸ்பிஐ வங்கி கிளை மற்றும் ATM சேவைகள் பாதிக்கப்படலாம்

ஒரு பெரிய சிக்கல் தீர்ந்தது

EPFO இன் படி, நீங்கள் பழைய வேலையிலிருந்து வெளியேறும் தேதி புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவோ அல்லது கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றவோ முடியாது. ஆனால் இப்போது EPFO ​​வெளியேறும் தேதியை புதுப்பிக்கும் உரிமையை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இது அவர்களுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

ஊழியர்களுக்கு பிரச்சினைகள் இருந்தன

எந்தவொரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்திலும், ஊழியரின் சம்பளத்தின் ஒரு பகுதி PF –க்காக பிடிக்கப்படுகிறது. இந்த பணம் ஊழியரின் பி.எஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஊழியர் அங்கு பணிபுரியும் வரை, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்திற்குச் செல்லும்போது பிரச்சினை ஏற்படுகிறது.

ஆன்லைனில் புதுப்பிக்க முடியும்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பழைய நிறுவனம் தகவல்களைப் புதுப்பிக்க உதவுவதில்லை. ஊழியர்களின் இந்த பிரச்சினை இப்போது மத்திய அரசால் தீர்க்கப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் அதை ஆன்லைனிலும் எளிய வழியில் புதுப்பிக்க முடியும்.

இப்போது PF-க்கு இந்த அளவு வட்டி கிடைக்கிறது

சமீபத்தில், மத்திய அரசு 2020-21 வணிக ஆண்டிற்கான புதிய பிஎஃப் வட்டி விகிதங்களை அறிவித்தது. கொரோனா தொற்றின் சிரமங்கள் இருந்தபோதிலும், பி.எஃப் மீதான வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. வட்டி விகிதத்தில் எந்தக் குறைப்பும் ஏற்படவில்லை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை 6 கோடி EPF உறுப்பினர்களுக்கு நேரடியாக பயனளிக்கும்.

ALSO READ: பணம் சம்பாதிக்க பெண்களுக்கு சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த PNB வங்கி!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News