ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் (Jammu Kashmir) புட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், ஒரு மொபைல் வீடியோ செயலியை உருவாக்கியுள்ளனர். இது சீன வீடியோ பகிர்வு செயலியான TikTok-க்கு மாற்றாக இருப்பதாக கூறுகின்றனர்.
கால்வான் (Galwan) பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் TikTok இந்தியாவில் தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். ஆப் டெவலப்பர் திப்பு சுல்தான் வானி மற்றும் அவரது மூத்த சகோதரர் மொஹமத் பாரூக் ஆகியோருடன் இணைந்து ‘Nucular’ என்ற பெயரில் ஒரு அதி நவீன செயலியை உருவாக்கியுள்ளனர்.
ANI உடன் பேசிய திப்பு சுல்தான் வானி, இந்த செயலியில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது Google Play-வில் கிடைக்கும் என்றும் கூறினார்.
“செயலியில் வீடியோக்களை வேகமாக பதிவேற்ற உதவும் தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். இணைய வேகம் மெதுவாக இருந்தாலும் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆக்மெண்டட் ரியாலிட்டி அமசங்களையும் செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இது போன்ற அம்சங்களைக் கொண்ட செயலிகள் இந்திய சந்தையில் இல்லை” என்று அவர் வலியுறுத்தினார்.
“நாங்கள் ARmask, ப்யூட்டி ஃபில்டர்கள், மற்றும் VR பேக்கிரௌண்ட் ஆகியவற்றில் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம். நாங்கள் மேலும் மேலும் ஃபில்டர்களையும் எடிட்டிங் டூல்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். ஐந்து விநாடிகள் முதல் 60 வினாடிகள் வரை நீளம் கொண்ட வீடியோக்களை யார் வேண்டுமானாலும் பதிவேற்றலாம். எந்தவொரு வீடியோ ஃபைலிலும் எடிட், கட், இசை சேர்ப்பது ஆகியவற்றையும் செய்யலாம். இந்த செயலியில் 4k ரெசல்யூஷன் உள்ளது” என்றார் அவர்.
ALSO READ: தன்னம்பிக்கை இந்தியா 3.0 திட்டத்தில் யார் அதிகம் பயனடைவார்கள்- இதோ முழு விவரம்!!
இந்த செயலியில் 5,000 ஃபாலோயர்களைப் பெறும் நபருக்கு 2000 ரூபாய்க்கான ரொக்கப் பரிசு கிடைக்கும் ஒரு போட்டியை அவர்கள் தொடங்கியுள்ளதாக வானி கூறினார்.
"நாங்கள் பல பரிசுகளையும் வழங்குகிறோம். செயலியில் 5,000 ஃபாலோயர்களை பெறுபவர்களுக்கு ரூ .2,000 ரொக்கம் கிடைக்கும். லைக்குகள் மற்றும் ஷேர்கள் மூலம் மக்கள் பணம் ஈட்டும் விதத்தில் அடுத்த புதுப்பிப்பில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று அவர் கூறினார்.
வானி முன்னர் “File Share Tool” என்ற ஒரு மொபைல் செயலியையும் உருவாக்கியுள்ளார். இது தடை செய்யப்பட்ட சீன (China) செயலியான SHAREit-க்கு மாற்றாக இருக்கும். இதன் மூலம் 40 MB வேகத்தில் ஃபைல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR