ஓட்டுநர் உரிமம் புதிய விதிகள்: மத்திய அரசு தற்போது திருத்தியமைத்துள்ள சில புதிய விதிகளின் மூலம் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எளிமையான ஒன்றாக மாறிவிட்டது. அதன்படி இனிமேல் நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்று வாகனம் ஓட்டும் சோதனையை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. இதற்கென ஒரு நாளை ஒதுக்கி நீண்ட வரிசையில் கால் நோக நிற்க வேண்டிய அவசியமும் இனி எவருக்கும் ஏற்படாது.
மத்திய அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, வாகன ஓட்டிகள் டிரைவிங் லைசென்ஸ் பெற ஆர்டிஓ-வின் ஒப்புதலுக்காக காத்திருக்கவும் வேண்டாம், அவரிடம் நீங்கள் வாகனத்தை ஒட்டி காட்டவும் வேண்டாம்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ள நிலையில், புதிய விதிகள் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டு, இந்த விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதுமட்டுமின்றி, ஆர்டிஓவின் காத்திருப்போர் பட்டியலில் ஓட்டுனர் உரிமம் உள்ளவர்களுக்கும் இதில் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | Aadhaar Update: உங்கள் மொழியில் ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம், வழிமுறைகள் இதோ
மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, நீங்கள் ஆர்டிஓவிடம் செல்லாமல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற பதிவு செய்து கொள்ளலாம். ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் அவர்கள் பயிற்சி பெற்று அங்கு நடக்கும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன் பின் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி பள்ளி மூலம் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழின் அடிப்படையாக கொண்டு பதிவு செய்த விண்ணப்பதாரருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
மேலும் பயிற்சி மையங்கள் தொடர்பாக சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து சில வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான பயிற்சி மையங்களுக்கு அருகில் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நடுத்தர மற்றும் கனரக பயணிகள், சரக்கு வாகனங்கள் தொடர்பான ஓட்டுநர் பயிர்சி மையங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
பயிற்சியாளர் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், போக்குவரத்து விதிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
அமைச்சகம் ஓட்டுநர் பயிற்சி வழங்கும் முறை மற்றும் அதற்கான பாடத்திட்டத்தையும் வகுத்துள்ளது. இதன் கீழ், இலகுரக மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு, பயிற்சிக் காலம் அதிகபட்சம் 4 வாரங்களாக இருக்கும். 29 மணி நேரம் நீடிக்கும்.
ஓட்டுநர் மையங்களின் பாடத்திட்டம் 2 பகுதிகளாக பிரிக்கப்படும். கோட்பாடு மற்றும் நடைமுறை.
- அடிப்படைச் சாலைகள், கிராமப்புறச் சாலைகள், நெடுஞ்சாலைகள், நகரச் சாலைகள், வாகனத்தில் ரிவர்ஸில் பார்க் செய்தல் மற்றும் வாகன, மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி வாகனம் ஓட்டுதல் மற்றும் பலவற்றில் வாகனம் ஓட்டுவதற்கு மக்கள் 21 மணிநேரம் செலவிட வேண்டும்.
- கோட்பாட்டு தொடர்பான முழுப் பாட நேரம் 8 மணி நேரம், இதில் சாலை விதிகள், போக்குவரத்துக் கல்வி, விபத்துக்கான காரணங்களைப் புரிந்துகொள்வது, முதலுதவி மற்றும் எரிபொருள் திறன் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்கவும்; எளிமையான செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR