உடல் எடையை குறைக்க ஆசையா.. இந்த 5 ஆரோக்கியமான பானங்களை குடிங்க

Healthy Drinks For Weight Loss : உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மட்டும் போதாது, இதனுடன் உங்கள் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 31, 2024, 12:16 PM IST
  • உணவு கட்டுப்பாட்டுடன் இந்த பானங்களையும் குடியுங்கள்.
  • தேன் தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவும்.
  • சுக்கு நீர் கொழுப்பைக் கரைக்க உதவும்.
உடல் எடையை குறைக்க ஆசையா.. இந்த 5 ஆரோக்கியமான பானங்களை குடிங்க title=

Weight loss tips : உடல் எடை குறைப்பு என்பது தற்போது அனைவராலும் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. ஏனென்றால், முன்பில்லாத அளவிற்கு உடல் பருமன் மக்களை அதிகம் கவலைக்கொள்ள செய்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்க வழக்கத்தில் மாற்றம் ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய காரணியாக அமைகின்றன. உடல் பருமன் என்பது ஒரு நோய் நினைப்பது தவறு. உடல் பருமன் அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகரிக்கலாம். இதன்மூலம் நெஞ்சு வலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதே இதற்கான சிறந்த வழியாகும். உடல் பருமன் என்பது இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை இருக்கிறது. இதில் இளைய தலைமுறையினருக்கு உடல் எடை குறைப்பு என்பது சற்று சுலபம் என்றாலும், 30 வயதை கடந்த பின்னர் உடல் எடை குறைப்பது எளிதாக செய்யலாம் என கூறப்படுகிறது. 

உடல் எடை அதிகரிக்காமல் அப்படியே கட்டுப்பாட்டுடன் இருக்க இந்த பானங்களை குடியுங்கள்
இந்நிலையில் உடல் எடை அதிகரிப்பால், தன்னம்பிக்கை குறைவது மட்டுமின்றி, பல வகையான உடல்நல பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் உணவு கட்டுப்பாட்டுடன் இந்த பானங்களையும் குடியுங்கள்.

உடல் எடை குறைக்க இலவங்கப்பட்டை தண்ணீர் | Cinnamon Water For Weight Loss : 
இலவங்கப்பட்டை தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால், உடலுக்கு நன்மை பயக்கும். இதை தயாரிக்க, சுமார் 2 கிளாஸ் தண்ணீரில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை சேர்க்கவும், இந்த தண்ணீர் பாதியாக குறைந்ததும் தண்ணீரை ஆறவைத்து வடிகட்டு குடிக்கவும்.

மேலும் படிக்க | எகிறும் உடல் எடையை பட்டுனு குறைக்க உதவும் பச்சை உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

தேன் தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவும் | Honey Water Controls Weight : 
தேன் தண்ணீரை தயாரிக்க முதலில் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சுமார் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனால் உங்கள் எடை குறையத் தொடங்கும்.

சுக்கு நீர் கொழுப்பைக் கரைக்க உதவும் | Dry Ginger Water Melts Belly Fat :
சுக்கு தண்ணீரை அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவும். சுக்குத் தண்ணீரைத் தயாரிக்க, முதலில் சுக்கு பொடியை 1 லிட்டர் தண்ணீரில் இரவு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கவும். இதனால் உடல் எடை குறையத் தொடங்கும்.

வெந்தய தண்ணீர் குடிக்கவும் | Drink Fenugreek Water :
இந்த தண்ணீரை இதற்கு 1 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும். இப்போது இந்த தண்ணீரை குடித்தால் உங்கள் எடையை கட்டுப்படுத்தலாம்.

ஆளிவிதை தண்ணீரை குறைக்கலாம் | Flaxseed Water :
வயிற்றில் கொழுப்பு நிறைந்திருந்தால் அதைக் குறைக்க ஆளிவிதை நீரை குடிக்கலாம். ஆளிவிதை நீரில் நல்ல அளவு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது உடல் எடையை குறைக்க உதவும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க வீட்டிலேயே இப்படி பண்ணுங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News