7th Pay Commission: ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்.. அரசு அளிக்கப்போகும் பரிசு

7th Pay Commission: விரைவில் அரசு தரப்பில் இருந்து ஊழியர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள் வரவுள்ளன. இவை ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள இரு பெரிய பரிசுகள் என்றே கூறலாம்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 20, 2023, 08:49 AM IST
  • 7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு.
  • டிஏ எவ்வளவு அதிகரிக்கும்?
  • ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய நல்ல செய்தி.
7th Pay Commission: ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்.. அரசு அளிக்கப்போகும் பரிசு title=

7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, அல்லது உங்கள் குடும்பத்தில் யாராவது மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் இருந்தாலோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கின்றது. விரைவில் அரசு தரப்பில் இருந்து ஊழியர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள் வரவுள்ளன. இவை ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள இரு பெரிய பரிசுகள் என்றே கூறலாம்.  விரைவில், டிஏ அதிகரிப்பு மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த அப்டேட்டை மத்திய மோடி அரசு வெளியிட உள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளும் ஒருசேர வெளியிடப்பட்டால், அது அனைத்து ஊழியர்களின் மனதையும் வெல்லும் அளவுக்குப் பெரிய பரிசாக அமையும்.

அரசாங்கம் அகவிலைப்படியை சுமார் 4 சதவிகிதம் அதிகரிக்கப் போகிறது. அதன் பிறகு அடிப்படை சம்பளத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். இந்த அதிகரிப்பு ஏற்பட்டால், அது ஊழியர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். எனினும் இது குறித்து அரசாங்கம் எந்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை. இந்த அறிவிப்பு வந்தவுடன்தான் இது குறித்த தெளிவு கிடைக்கும். 

டிஏ எவ்வளவு அதிகரிக்கும்? 

மோடி அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தினால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். இதன் காரணமாக, அடிப்படை சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. ஊழியர்கள் தற்போது 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதற்கு முன்னர் மார்ச் மாதத்தில் டிஏ அதிகரிக்கப்பட்டது, இதன் விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் அமல்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க | Instant Pan Card: ஆதார் மூலம் உடனடி பான் கார்டு வாங்கலாம்! எப்படி தெரியுமா?

ஒரு ஆண்டில், ஜனவரி மற்றும் ஜூலை என இரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. அந்த வகையில் தற்போது அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஜூலை 2023 -க்கான அகவிலைபப்டி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும். அதிகரித்த அகவிலைப்படி ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இதன் மூலம் பயனடையும். ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய பரிசாக இருக்கும். இதை விரைவில் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். 

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய நல்ல செய்தி

அடிப்படை சம்பளத்தில் பம்பர் பலனைத் தரும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பு என்ற பரிசை மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் பெறக்கூடும். மோடி அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.60 மடங்குகளில் இருந்து 3.0 மடங்காக உயர்த்தக்கூடும். மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

2016 -இல் மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டது. அதே ஆண்டில், மத்திய ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு (7th Pay Commission) அமலுக்கு வந்தது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவதற்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 6000 ரூபாயில் இருந்து 18000 ரூபாயாக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நேரடியாக உயர்த்தியது.

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படை சம்பளத்தின் 2.57 மடங்கு ஆகும். ஆனால், இதை 3 மடங்குக்கு மேல் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஃபிட்மெண்ட் ஃபாக்டரை மூன்று மடங்காக உயர்த்தினால், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய்க்கு மேல் உயரும். 

மேலும் படிக்க | UPI பரிவர்த்தனையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News