#BoycottTanishq: தனிஷ்க் நகைக்கடையை புறக்கணிக்கும் நெட்டிசன்கள். காரணம் என்ன?

ட்விட்டரில் #BoycottTanishq என்ற ஹேஷ்டேக் ஏற்படுத்திய புயலுக்கு பிறகு, தவறை ஒப்புக்கொண்ட தனிஷ்க் ஆபரண நிறுவனம், தனது விளம்பரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதன் பின்னணி என்ன? தெரிந்துக் கொள்வோம்…  தனீஷ்கின் இப்போது திரும்பப் பெறப்பட்ட விளம்பரம் சமூக ஊடகங்களில் பல தீவிர விவாதங்களைத் திறந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2020, 07:54 PM IST
  • "லவ் ஜிஹாத்" கருத்துக்கு வலு சேர்க்கும் விளம்பரம் என்று விமர்சனங்கள் சாடுகின்றன.
  • "போலி மதச்சார்பின்மை" என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
  • சிலரோ, இதை இயல்பான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
#BoycottTanishq: தனிஷ்க் நகைக்கடையை புறக்கணிக்கும் நெட்டிசன்கள். காரணம் என்ன? title=

புதுடெல்லி: பிர்பல நகை விற்பனை நிறுவனமான தனீஷ்க் தனது புதிய விளம்பரத்திற்காக சமூக ஊடகங்களில் மிகவும் ட்ரோல் ஆனது. ட்விட்டரில் பெரும் பின்னடைவைப் பெற்ற தனிஷ்க் நிறுவனம், விளம்பரத்தை நீக்கியது. மத நல்லிணக்கத்தை, குடும்பப் பின்னணியில் சொல்வதாய் சித்தரிக்கப்படும் சர்ச்சைக்குரிய விளம்பரம் சமூக ஊடகங்களில் கடும் கண்டங்களை எதிர்கொண்டது. இணையவாசிகள், இதுவொரு "லவ் ஜிஹாத்" கருத்துக்கு வலு சேர்க்கும் விளம்பரம் என்று சாடினால், மற்ற தரபினரோ "போலி மதச்சார்பின்மை" என தனிஷ்க் நிறுவனத்தை சாடுகிறது.

#BoycottTanishq என்ற ஹேஷ்டேக் சில நாட்களாக வைரலானது. அந்த விளம்பரத்தில். கர்ப்பிணிப் பெண் ஒருவரை, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மற்றொரு பெண்மணி அழைத்துச் செல்வதை சித்தரித்தது. விழாவிற்கு பாரம்பரியமாக உடையணிந்து வரும் அந்த கர்ப்பிணி பெண்ணை அமர வைத்த பிறகு, மற்றொரு பெண்ணிடம், இப்படி கேட்கிறார்: "மா, உங்கள் வழக்கத்தில் இதுபோன்ற பழக்கம் இல்லையா?"
மாமியாராக தோற்றமளிக்கும் பெண், இஸ்லாமிய பாணியில் சல்வார் குர்தா அணிந்திருக்கிறார். தலையை மூடும்படி துப்பட்டா அணிந்திருப்பார். அவர் கர்ப்பிணி பெண்ணிடம் இவ்வாறு சொல்கிறார்: "மகள்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பாரம்பரியம் அனைவரின் வீட்டிலும் உள்ளது" என்று கூறுகிறார். பின்னர் கேமரா வீட்டில் உள்ள பிற விருந்தினர்களைக் காட்டுகிறது.   கூட்டு குடும்பமாக வாழ்பவர்கள் என்பதை காட்சி சித்தரிக்கிறது.  

இந்த வீடியோ இனி YouTubeஇல் கிடைக்காது
விளம்பரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், தனிஷ்க், பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது: "சொந்த குழந்தையைப் போலவே நேசிக்கும் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட பெண். அந்த பெண்ணின் மகிழ்ச்சிகாக, அவர்கள் வழக்கமாக செய்யாத ஒரு சடங்கை செய்ய தயாராகிறார்கள். இதுவொரு அழகான இரண்டு வெவ்வேறு மதங்களின் சங்கமம், மரபுகள், கலாச்சாரங்கள் என்பதையே விளம்பரம் சித்திரிக்கிறது".

Read Also | தங்கம் மற்றும் வெள்ளி முகக்கவசங்கள் விற்பனை அமோகம்… தேவை அதிகரிக்கிறது

ஆனால், இது லவ் ஜிஹாத் என்ற தவறான நோக்கத்தை ஆதரிப்பதாகவும், மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தை போலியாய் தூக்கிப் பிடிப்பதாகவும் சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளை கண்டனங்களாக வெளியிட்டுள்ளனர்.

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் எழுந்த ஆரம்பக் கட்டத்தில், YouTube இல் இருந்த விளம்பரத்தில் அது தொடர்பான கருத்துகள் எழுதப்பட்டன. அப்போது, அந்த விளம்பரத்தில் கருத்துகள் மற்றும் லைக் போடும் தெரிவுகளை தனீஷ்க் முடக்கியது. ஆனால், விளம்பரத்திற்கான எதிர்பானாது தனிஷ்கை புறக்கணி, இனி ஜென்மத்திற்கும் தனிஷ்க்கில் நகை வாங்க மாட்டேன் என்ற எதிர்ப்பு மனநிலையை பார்த்த நிறுவனம், செவ்வாயன்று வீடியோவை முழுவதுமாக வாபஸ் பெற்றது. விளம்பரத்தை திரும்பப் பெற்றதற்கான காரணம் எதையும் தனிஷ்க் நிறுவனம் கூறவில்லை.

இந்த விளம்பரம் தனிஷ்க் பிராண்ட் மீதான எதிர்ப்பான விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், ஒரு சிலர், இந்த விவகாரத்தில் நிறுவனத்திற்கு தங்களது ஆதரவைக் கொடுத்ததுடன், விளம்பரத்தை அகற்ற வேண்டாம் என்றும் கருத்துகளை பதிவிட்டனர்.

Read Also | லாக்டவுன் ஆகுமா தங்கத்தின் விலை?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News