கொசு... உருவத்தில் சிறியது, ஏற்படுத்தும் பாதிப்போ மிகவும் பெரியது. கொசுவை நினைத்தாலே அதன் கடியும், அதனால் ஏற்படும் நோய்களும் பயத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் கொசுவைப் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
உலகத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் உயிரினங்களுள் ஒன்று கொசு. கொசுவின் எடை 2.5 மில்லி கிராம் மட்டுமே, ஆனால் பற்கள் மட்டும் 47 இருக்கிறது. மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு மட்டும் தான்.
நொடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிப்பதால் தான் கொசு (Mosquitoes sound) உங்கள் அருகில் வந்தால் அதன் சப்தத்தை உங்களால் கேட்க முடிகிறது. சில வாரங்கள் மட்டுமே வாழக்கூடிய கொசுவினால், உலகத்தில் ஆண்டுதோறும் 10 லட்சம் மனிதர்கள் இறக்கிறார்களாம்.
கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு 5 நாட்கள் மட்டுமே ஆகுமாம். கொசுவினால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல், யானைக்கால் நோய் ஆகியவை ஆகும்.
ALSO READ | இப்படி சகட்டுமேனிக்கு முட்டையிட்டா என்ன அர்த்தம்? வைரலாகும் கொசு வீடியோ
50 அடி தொலைவில் மனிதர்கள் இருந்தாலும் அதைத் தெரிந்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை கொசுக்கள். மனிதர்கள் வெளியிடும் மூச்சு காற்றையும், வியர்வையையும், மனித உடலின் மணத்தையும் கொசுக்கள் உணர்ந்து கொள்கின்றன.
யாரை கடிக்க வேண்டும் என்பதை தனது பிரத்யேக மோப்ப சக்தி மூலம் கொசுக்கள் கண்டறிந்துவிடுமாம்! அதிலும், வண்ண ஆடைகள், குறிப்பாக சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்திருப்பவர்களையும், மது அருந்தியிருப்பவர்களையும் எளிதில் கண்டறிந்து அவர்களை கடிக்குமாம் கொசு. அந்த ஆடைகள் வெளியிடும் மணம், மதுவின் நாற்றம் ஆகியவை கொசுவை ஈர்க்குமாம்.
பெண் கொசுக்கள் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடும். அவை 16 மணி நேரத்திற்குள் பொரிந்து விடும். முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களிலேயே கொசுக்கள் இனப் பெருக்கம் (Mosquitoes breed) செய்வதால் தான், கொசுத்தொல்லையை எப்போதுமே முடிவுக்கு கொண்டுவர முடிவதில்லை.
உலகின் அபாயகரமான பூச்சியினம், கொசு என்று கின்னஸ் அறிவித்துள்ளது.
மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்குமாம்! காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் கொசுக்களை கவருகின்றன. இதில் மற்றுமொரு சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், கொசுக்களில், பெண் கொசுக்கள் தான் உயிரினங்களை கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன.
READ ALSO | கொசுத் தொல்லை தாங்கலையா? இதோ Simple & low-cost நிவாரணம்...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR