Daily Horoscope Today 13 April 2022: இன்று இந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும்

ராசிபலன் இன்று, 13 ஏப்ரல் 2022: மிதுன ராசிக்காரர்கள் தடைபட்ட வேலைகளில் முன்னேற்றம் காண்பார்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 13, 2022, 05:45 AM IST
  • வியாபாரத்தில் வெற்றி
  • உடலை கவனித்துக் கொள்ள வேண்டும்
  • சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்
Daily Horoscope Today 13 April 2022: இன்று இந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் title=

ராசிபலன் இன்று, 13 ஏப்ரல் 2022: புதன்கிழமை ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறலாம். மேலும், ஆஸ்ட்ரோ குரு பெஜன் தருவாலாவின் மகன் சிராக் தருவாலாவிடம் இருந்து, இன்றைய தினம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

மேஷம்: இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றாததால் நண்பர்கள் கடுப்பாவார்கள்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 
  
ரிஷபம்: புதன் கிழமையன்று உடலும் மனமும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். அனைத்திலும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
 
மிதுனம்: இன்று சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறி மன நிம்மதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு யாவும் கிடைக்கப்பெறும். 

கடகம்: இன்று நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேன்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

சிம்மம்: இன்று மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளைப் படைப்பார்கள். அரசுவழியில் பல உதவிகளும் தேடிவரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பெருகும். பொருளாதாரமும் மேம்படும். சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் அம்மனை வழிபடுவது உத்தமம். 

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் இன்று நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.  குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவுகள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றால் மன நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலைகளே நிலவும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம். 

துலாம்: இன்று திருமண சுபகாரிய முயற்சிகளிலும் எதிர்பார்த்த சாதகப்பலனை அடைவதில் காலதாமதம் உண்டாகும். உடல்நிலையும் சிறப்பாக அமையும் என்று கூறமுடியாது. உத்தியோகஸ்தர்களும் அடிக்கடி விடுப்பு எடுக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஆளாவார்கள்.

விருச்சிகம்: இன்று எதிர்பாராத இடமாற்றங்கள் வீணான அலைச்சல்களை ஏற்படுத்திவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை அபிவிருத்திச் செய்ய முடியாத நிலைகள் ஏற்படும். 

தனுசு: இன்று மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதே நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்தால் ஓரளவுக்கு முன்னேறமுடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. 

மகரம்: இன்று  எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.  உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் சென்றால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.

கும்பம்: இன்று கொடுக்கல்-வாங்கலில் மட்டும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைச் சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உதவிகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் சற்று அதிகரிக்கவே செய்யும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். 

மீனம்: இன்று திருமண சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்திச் செய்யமுடியும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவந்தாலும் பணவரவில் சில தடைகளும் நிலவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News