நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின், சென்ற நவம்பர் மாதம் அயோத்தியில் (Ayodhya) ராமர் கோவிலை கட்டுவதற்கு அனுமதி அளித்து தீர்ப்பு வந்தது.
அதை அடுத்து, இந்த வருடம் ஆக்ஸ்ட் 5ம் தேதி நடந்த பூமி பூஜையில், அமைதியின் அடையாளமாக திகழும் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்தியில் ஸ்ரீராமர் கோவிலை கட்டுவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி ( PM Narendra Modi) 40 கிலோ வெள்ளியினால் ஆன, செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார்.
500 அண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் (Ram Temple), காலம் கடந்து நிற்கும் வகையில் கட்டப்பட உள்ளது.
இதற்கு ஐஐடி சென்னையை சேர்ந்த சிறந்த வல்லுநகள் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஐஐடி சென்னையை சேர்ந்த மிகச்சிறந்த வல்லுநர்கள், இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவதோடு, மத்திய கட்டுமான ஆராய்ச்சி நிறுவனமான CBRI-யும் இதில் பங்கேற்கின்றன என ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொது செயலர் சம்பத ராய் தெரிவித்தார்.
இது தவிர லார்சன் அண்ட் ட்யூப்ரோ (Larsen & Toubro) நிறுவனமும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.
கட்டுமானத்தில் சுமார் 10,000 தாமிர கம்பிகள் பயன்படுத்தப்பட உள்ளன என விஷவ ஹிந்து பரிஷத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | நான் அயோத்தி…. சரயு நதிக்கரையில் வரலாற்றின் சாட்சியாக நிற்கும் புண்ணிய பூமி!!
காற்று, வெயில், தண்ணீர் ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் முழுவதும் கற்களால் கட்டப்பட உள்ளது.
இது தவிர, ராமர் கோவிலில் அமையுள்ள பிரம்மாண்ட மணியை உத்தரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜலேசர் நகரில் உள்ள கைவினைஞர்கள் தயாரித்து வருகின்றனர். அயோத்தியில் கட்டப்படும் புதிய ராமர் கோயிலில் நிறுவப்பட உள்ளது. இந்த மணி 2,100 கிலோ எடையுள்ளதாக இருக்கும்.
இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த பிரம்மாண்டமான மணி ஒரே வார்ப்பில் தயாரிக்கப்படுகிறது. அதாவது உலோகத்தை உருக்கி மிகப்பெரிய அச்சில் ஊற்றி தயரிக்கின்றனர்.
மேலும் படிக்க | ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்… உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமன்!!