புதுடெல்லி: திருமணம் என்றாலே மனதில் ஆசை கொழுந்து விட்டெழும் இளைஞர்களுக்கு இது ஆச்சர்யமான செய்தி மட்டுமல்ல, அதிர்ச்சியான செய்தியாகவும் இருக்கலாம். பொறியியல் படித்தவர்களுக்கு பெண் கொடுக்க காத்துக் கொண்டிருந்த காலம் மாறி, எஞ்சினியர் மாப்பிள்ளை வேண்டாம் என்று ஒதுக்கும் நிலை இந்தியாவில் வந்துவிட்டது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா? விருப்பங்கள் அனைத்துமே காலத்திற்கேற்ப மாறும் என்றாலும், திருமணம் தொடர்பான விளம்பரங்களில், எஞ்சினிரியங் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாவிட்டாலும் இது நிதர்சனமான உண்மை.
இந்திய திருமணங்களில் வரன் தேடும் படலம் வினோதமான தனித்தன்மைகளைக் கொண்டதாக இன்றைய இளைய தலைமுறை கருதும் நிலையில், அவர்களின் அதீத ஆர்வமுள்ள பெற்றோர்கள, தங்களுடைய சாதி, மதம், மாநிலம், மொழி, தோல் நிறம் உட்பட பல விஷயங்களின் அடிப்படையிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடுகின்றன.
திருமணத்தை பலர் தங்கள் 'ஸ்டேடஸ் சிம்பள்' ஆக காட்டிக் கொள்ள முயல்கின்றனர். தொழில் வகையிலும், பார்க்கும் வேலையின் அடிப்படையிலும் வரன் தேடுவது ஒரு புறம் என்றால், செல்வந்தர்களுக்கான மேட்ரிமோனியல்களும் பிரத்யேகமாக உள்ளன. இங்கு பதிவு செய்வதற்கே லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டுமாம்!
மேலும் படிக்க | கண் கலங்க வைக்கும் கணவன் மனைவி பாசம்: நெட்டிசன்களை அழ வைத்த வைரல் வீடியோ
உயரடுக்கு சமூகத்தில் வரன் தேடும் மேட்ரிமோனியலில் பதிவு செய்வது அவர்களின் 'மதிப்பு-நிலையை' உயர்த்தும் என்ற நினைப்பு அதிர்ச்சியளிக்கிறது என்றால், எஞ்சினியர்களை புறம் தள்ளும் மனநிலை வந்ததற்கான காரணமும் சிந்திக்க வைக்கிறது.
இத்தகைய 'திருமணச் சந்தை'க்கு இந்தியர்கள் பழகிவிட்டனர். மென்பொருள் பொறியாளர்களின் நாடு என்று அறியப்படும் இந்தியாவில், இந்தத் துறையில் வேலை பார்க்கும் இளம் தலைமுறையினர் நல்ல சம்பளம் பெறுகின்றனர். எனவேதான், எஞ்சினியர்களை வேண்டாம் என்று சொல்லும் போக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
செய்தித்தாள் ஒன்றில் திருமண விளம்பரத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இது ஒரு பெண் (அல்லது அவருடைய பெற்றோர்) மணமகனைத் தேடிய விளம்பரம் அது.
மேலும் படிக்க | பாக்கெட் பாலுக்குள் ஈ? பால் குடிக்க கவருக்குள் புகுந்ததா?
"பணக்கார குடும்ப பிசினஸ் பின்னணியில் உள்ள எம்பிஏ பெண் அழகான மாப்பிள்ளை தேடுகிறாள். மணமகன் ஐஏஎஸ்/ஐபிஎஸ் ஆகவோ, டாக்டராகவோ அல்லது தொழிலதிபராகவோ, அதே சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்..." என்று விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு திருமண விளம்பரத்திலும் இப்படிப்பட்ட வாசகங்கள் தானே இடம் பெறும் என்ற கேள்வி எழுகிறதா? 'சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இந்த விளம்பரத்திற்கு பதிலளிக்க வேண்டாம்' என்ற அடுத்த வரிகள் தான் இன்றைய மாறிவரும் மனோநிலையைக் குறிக்கிறது.
ஆனால், இந்தியாவில் இப்படி ஒரு விளம்பரம் போடும் போது, சாஃப்ட்வேர் இன்ஜினியரை வேண்டாம் என்று சொல்வது வித்தியாசமானதாக இருக்கும் என்று மணப்பெண்ணுக்குத் தெரியாதா? மணமகளும் அவளுடைய பெற்றோரும் தனிப்பட்ட முறையில் எஞ்சினியர்கள் மீது விருப்பம் இல்லாமல் இருக்கலாம் என்றாலும் மாறி வரும் திருமணச்சந்தைகளின் போக்கு ஆச்சரியங்களைத் தருகிறது.
மேலும் படிக்க | ‘ஏம்மா...ஆவி கீவி புகுந்துடுச்சா?’: சமையலறையில் பெண் ஆடிய பேய் நடனம், வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ