முதல்முறையாக நிலவில் தரையிறங்க தயாராகும் ISRO!!

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு அமைப்புகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள ISRO ஒரு புதிய சாதனைத் திட்டத்தை அறிவித்து உள்ளது.

Last Updated : Dec 4, 2017, 09:11 AM IST
முதல்முறையாக நிலவில் தரையிறங்க தயாராகும் ISRO!! title=

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு அமைப்புகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள ISRO ஒரு புதிய சாதனைத் திட்டத்தை அறிவித்து உள்ளது.

வரும் 2019-ம் ஆண்டில் சூரியனுக்கு விண்கலம் அனுப்பவிருப்பதாக ஏற்கெனவே ISRO அறிவித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

"சந்திரயான் - 2" எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளித் திட்டம்தான், நிலவில் தரையிறங்குவதற்கான இந்தியாவின் முதல் திட்டமாகும். அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அந்த விண்கலம் சந்திரனை நோக்கி அனுப்பப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு சீனாவால் அனுப்பப்பட்ட யூடு ஆய்வுக் கலம்தான் நிலவில் தரையிறங்கிய கடைசி ஆய்வுக் கலமாகும். அதற்குப் பிறகு தற்போது இந்தியாவின் "சந்திரயான்-2" ஆய்வுக்கலம்தான் நிலவின் தரையில் வலம் வரவுள்ளது.

நிலவில் இந்தியா விண்கலம் அனுப்பி ஆய்வு மேற்கொள்வது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, கடந்த 2008-ம் ஆண்டில் ISRO அனுப்பிய "சந்திரயான்-1" விண்கலம், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டு, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. 

இந்நிலையில் அடுத்த ஆண்டு அனுப்பப்படவிருக்கும் "சந்திரயான்-2", நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றும் ஒரு விண்கலம், நிலவின் தரைப் பகுதியில் சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் 6 சக்கரங்களைக் கொண்ட ஆய்வுக் கலம், விண்கலத்திலிருந்து நிலவின் தரைப் பகுதிக்கு ஆய்வுக் கலத்தைக் கொண்டு சென்று தரையிறக்கும் செலுத்துக் கலன் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது.

சுமார் 3,290 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம், செலுத்துக் கலம், ஆய்வுக் கலம் என அனைத்துமே முழுக்க முழுக்க இஸ்ரோவால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News