ஏசி-யை வாடகைக்கு எடுக்க முடியுமா?

சில முன்னணி நிறுவனங்கள் குறைந்த விலையில் ஏசிகளை வாடகைக்கு தருகின்றன, இது பயனுள்ளதாக பார்க்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2022, 07:34 PM IST
  • கோடைகாலத்தில் ஏசியின் தேவை அதிகமாக உள்ளது.
  • தற்போது தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.
  • சில நிறுவனங்கள் ஏசி-யை வாடகைக்கும் விடுகின்றன.
ஏசி-யை வாடகைக்கு எடுக்க முடியுமா? title=

கோடை காலம் தொடங்கிவிட்டால் பலருக்கும் எரிச்சல் தான் வரும், ஏனெனில் வெப்பத்தின் தாக்கம் அந்த அளவிற்கு இருக்கும்.  வெயிலின் வெக்கையை தணிக்க பலரும் வீடுகளில் ஏசிகளை பொறுத்தியுள்ளனர், இவ்வாறு பொருத்தப்படும் ஏசிகள் கோடைகாலத்திற்கு மட்டும் தான் உதவும் மற்றபடி மழைகாலங்கள் மற்றும் குளிர் காலங்களில் இதனை யாரும் பயன்படுத்த போவதில்லை.  இதுவே கோடைகாலத்திற்கும் மட்டும் ஏசிகளை  நமது பட்ஜெட்டிற்கு தகுந்த விலையில் வாடகைக்கு வாங்கி பயன்படுத்தினால் எவ்வவளவு நன்றாக இருக்கும், அதுபோன்று சில முன்னணி நிறுவனங்கள் குறைந்த விலையில் ஏசிகளை வாடகைக்கு தருகின்றன, இது பயனுள்ளதாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஏசியில் கூலிங் சரியா வரலையா? இத செய்ங்க!

இவ்வாறு ஏசிகளை வாங்குவதெற்கென்றே பல ஆப்ஸ்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் உள்ளன, அதில் பலவீதமான விலைகளில் ஏசிகள் உள்ளன.  குடும்பத்தினரை விட்டு தனியாக நகரங்களில் வாழும் இளைஞர்களுக்கு வாடகைக்கு ஏசி வாங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  ஏசிகளை உலகம் முழுவதும் செயல்படும் எவ்வித ஆப்ஸ் மற்றும் ஆன்லைன் தளங்களிலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான விதிமுறை மற்றும் கொள்கைகளை பயன்படுத்தமாட்டார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், தற்போது சில நிறுவனங்களை பற்றி இங்கே காண்போம்.

1) ரென்டோ மோஜோ :

மரச்சாமான்கள் முதல் வீட்டிற்கு தேவையான பல பொருட்களை ரென்டோ மோஜோ வாடகைக்கு வழங்குகிறது.  இது பெரிய நகரங்களான மும்பை, டெல்லி, நொய்டா, குர்கான், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது.  இது ஆப்ஸ் வடிவிலும் மற்றும் வெப்சைட் வடிவிலும் மக்கள் அணுகுவதற்கு கிடைக்கிறது, மேலும் இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டார் ஆகிய இரண்டிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.  ரென்டோமோஜோவில் வாடகைக்கு கிடைக்கும் ஏசி 1 டன்னுக்கு மாதம் ரூ.1219ல் தொடங்கி, 2 ஸ்டார் 1.5 டன் மெஷினுக்கு மாதம் ரூ.2469 வரை செல்கிறது.  இந்த வாடகையிலேயே இலவச இடமாற்றம், மேம்படுத்தல்கள், பொருத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்குகிறது.  மேலும் நீங்கள் எவ்வளவு காலங்கள் ஏசியை வாடகைக்கு எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்து வாடகையின் விலையளவு நிர்ணயம் செய்யப்படும்.

2) சிட்டி ஃபர்னிஷ் :

மரச்சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் வாடகைக்கு வழங்குவதில் இது ஒரு சிறந்த தளமாக பார்க்கப்படுகிறது.  டெல்லி, நொய்டா, குர்கான், ஹைதராபாத், மும்பை மற்றும் பெங்களூரு உட்பட பெரும்பாலான பெரிய நகரங்களிலும் இதன் சேவை செய்லபடுகிறது.  பல டிமாண்டுகள் காரணமாக தற்போது இதில் ஒரு விண்டோ ஏசி மாடல் தான் உள்ளது, இந்த 1.5 டன் திறன் கொண்ட ஒரு விண்டோ ஏசி மாடலின் வாடகை மாதத்திற்கு ரூ.1569 ஆகும்.  இதில் நீங்கள் முதலில் ஒரு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும், உங்கள் வாடகை காலம் முடிந்த பிறகு நீங்கள் செலுத்திய தொகை உங்களுக்கு திருப்பியளிக்கப்படும்.  இருப்பினும் இது ஏசியை பொருத்துவதற்கு கூடுதலாக பணம் வசூலிக்கிறது.

3) ஃபேர் ரென்ட் : 

எசிகளுக்கு ஏராளமான ஆப்ஷன்களை ஃபேர் ரென்ட் வழங்குகிறது.  விண்டோ ஏசி, ஸ்பிளிட் ஏசி என பலவித ஏசிகளை இதில் நாம் பார்க்கமுடியும்.   இதில் 0.75 டன் விண்டோ ஏசிக்கு மாத வாடகை ரூ.915 ஆகவும், 1 டன் ஸ்பிளிட் ஏசிக்கு மாத வாடகை ரூ.1375 ஆகவும் உள்ளது.  இதோடு கொடுத்தால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் இலவசமாக ஸ்டபிலைஸர் கிடைக்கிறது, மேலும் இந்த வாடகையிலேயே இலவச இடமாற்றம், மேம்படுத்தல்கள், பொருத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்குகிறது.

மேலும் படிக்க | டிரைவிங் லைசென்சில் விதிகள் மாற்றம்! இனி இப்படி பண்ணா போதும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News