புத-ஆதித்ய யோகம்: இந்த ‘3’ ராசிக்காரர்களின் காட்டில் பண மழை தான்..!!

2021 நவம்பர் 21 முதல் புத -ஆதித்ய யோகம் உருவாகிறது. இது 20 நாட்கள் நீடிக்கும் இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என ஜாதக வல்லுநர்கள் கூறுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2021, 06:49 AM IST
  • நவம்பர் 21 முதல் புத- ஆதித்ய யோகம் உருவாகிறது.
  • விருச்சிக ராசியில் புதனும் சூரியனும் இணையும்.
  • 3 ராசிக்காரர்களுக்கு புதன் - ஆதித்ய யோகம் செல்வ செழிப்பை கொண்டு வரும்
புத-ஆதித்ய யோகம்: இந்த ‘3’ ராசிக்காரர்களின்  காட்டில்  பண மழை தான்..!! title=

சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சி: வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு காரணமான சூரியனும் (Sun), புத்திசாலித்தனம், செல்வச்செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான புதனும் (Mercury) விரைவில் கூட்டணி அமைக்க உள்ளனர். இவ்விரு கிரகங்களும் விருச்சிக ராசியில் இணையும். சூரியன் மற்றும் புதன் இணைவது புதாதித்ய யோகம்  (Budhaditya Yogam) என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகம் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில ராசிக்காரர்களுக்கு புதன் ஆதித்ய யோகம் செல்வ செழிப்பை கொண்டு வரும்.

புத்தாதித்ய யோகம் 20 நாட்கள் நீடிக்கும்

கிரகங்களின் ராஜாவான சூரியன் 2021 நவம்பர் 16 அன்று விருச்சிக ராசிக்கு வருகிறார். புதன் கிரகமும் 2021 நவம்பர் 21 அன்று  இந்த ராசிக்குள் நிழைகிறார். இவ்வாறாக நவம்பர் 21ஆம் தேதி இரு கிரகங்களும் இணைந்து புத -ஆதித்ய யோகத்தை உண்டாக்கும். இந்த இரண்டு கிரகங்களும் டிசம்பர் 10 வரை விருச்சிக ராசியில் இருப்பதால் டிசம்பர் 10 வரை இந்த யோகம் இருக்கும். 20 நாட்கள் நீடிக்கும் புத்தாதித்ய யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

ALSO READ | இன்றைய தினத்தன்று மறந்துகூட இதனை செய்துவிடாதீர்கள்

இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பணவரவுகள் அதிகமாக இருக்கும். இந்த கால கட்டத்தில் தொழில்  சிறப்பாக இருக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் மூலம் மகிழ்ச்சியை பெறலாம். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
 
கும்பம்: கும்ப ராசிக்காரர்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மரியாதையும் அதிகரிக்கும். கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவார்கள். அது மகிழ்ச்சியைத் தரும். குறிப்பாக அரசுத் துறையுடன் தொடர்புடையவர்கள் அதிக பயன் பெறுவார்கள்.

ALSO READ | 600 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ..!!!

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இந்த கால கட்டம் மிகவும் சாதகமாக இருக்கும். பயணங்கள் பலனளிக்கும். பண ஆதாயங்களால் நிதி நிலை வலுவாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே நேரத்தில், விரும்பிய வேலை அல்லது இடமாற்றத்தை விரும்பும் நபர்களின் விருப்பங்களும் இந்த நேரத்தில் நிறைவேறும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | ஆடம்பரமாய் வாழ நினைக்கும் இந்த 4 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News