அண்மைக்காலமாக ’சிங்கிள் பசங்க’ என்ற டாக்குடன் ஏராளமான இளைஞர்கள் வலம் வருவதை பார்க்க முடியும். அதிலும், 90’ஸ் கிட்ஸ்கள் என சொல்லிக் கொண்டு, இன்ஸ்டாகிராமில் கெத்தாக ரீல்ஸ்களை பதிவிடுபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். 2K கிட்ஸூகளுக்கே கல்யாணமாகிவிட்ட நிலையில், பல 90's கிட்ஸ்கள் சிங்கிள் கெத்து என சொல்லிக் கொண்டு உள்ளே அழுது கொண்டு இருக்கிறார்கள்.
90's கிட்ஸ்கள், 2கே கிட்ஸூகளின் திருமணத்தை அல்லது காதலிகளுடன் இருப்பதை பார்த்து புழம்புவது போன்ற வீடியோக்களும் சுற்றுவதை அடிக்கடி பார்க்க முடியும். இதயம் முரளி வகையறாக்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துவிடலாம், திருமணம் மற்றும் காதல் மீது விருப்பம் இருந்தும் தனக்கான காதலி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதவர்களை எந்த கணக்கில் சேர்க்க?.
மேலும் படிக்க | குரு பூர்ணிமா 2022: உருவாகிறது 4 ராஜயோகங்கள்; யாருக்கு என்ன பலன்
ஒருவேளை உங்களுக்கு யார் மீது காதல் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், வித்தியாசமான உணர்வுகள், புதுமையான உடல்மொழிகள் வெளிப்படத் தொடங்கும். சிந்தனை சிறகடிக்கும், மனம் மயங்கிக் கிடக்கும். அப்போது, உங்களுக்கு ஒருவேளை காதலில் விழுந்துவிட்டோமோ? என்ற சந்தேகம் கூட எழலாம். அப்படியான சந்தேகம் உங்களுக்குள் இருந்தால் ஒரு சில அறிகுறிகளை வைத்து நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சிறகடிக்கும் மனம்
நீங்கள் அதிகம் பிரியம் கொண்டிருக்கும் நபர்களை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். அவர் எப்படி இருப்பார்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்றே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் துளைத்து துளைத்து தேடிக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்களாக புது அர்த்தம் கண்டுபிடித்து உங்களை பரவசமடைய செய்து கொள்வீர்கள்.
கண்தேடும் உருவம்
பிரியம் அதிகமாக இருப்பவர்களுடனேயே எப்போதும் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அவர்களுடன் இருக்கும்போது ஒருவிதமான மகிழ்ச்சியான உணர்வு உங்களுக்குள் ஏற்படும். எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் கூட அவர்களுடன் தான் இருக்க வேண்டும் என நினைப்பீர்கள். இருப்புக்காக ஏங்கும் நீங்கள், இல்லாத நேரத்தில் வெறுமையை உணர்வீர்கள். ஒருவேளை அவர்களுடன் இருந்தால் உங்களுக்கான நேரம் செல்வது என்பதே தெரியாது.
விழி மாறா பார்வை
தொலைவுகளில் அந்த உருவம் தெரிந்தாலும் முறைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். நொடிப் பொழுதும் விலகலை விரும்பாத நீங்கள், அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பதை தேடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிப்பீர்கள். சாதரண பார்வைகூட நெஞ்சில் கீறலை ஏற்படுத்தும். அவர்களின் கவர்ச்சி உங்களை அழகாக்கும். புன்னகையோடு எப்போதும் இருப்பீர்கள். இவையெல்லாம் நீங்கள் உணர்ந்தால், உங்களின் காதலி அல்லது காதலர் அவர் தான். மனம் விட்டு உரையாடுங்கள். காதல் வாழ்க்கை சிறக்கும்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொன்னான நாளாக அமையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR