எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: இனி வீட்டிலிருந்தே இந்த வேலையை முடிக்கலாம்

SBI Customers: உங்கள் வங்கிக் கணக்கில் நாமினி பெயர் இல்லை என்றால், வைப்புத் தொகையைப் பெறுவது மிகவும் கடினமாகிவிடும். இதற்கான சட்ட நடவடிக்கை மிக நீண்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2021, 04:47 PM IST
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: இனி வீட்டிலிருந்தே இந்த வேலையை முடிக்கலாம் title=

SBI Customers: உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால், நீங்கள் சேமித்த உங்கள் பணத்தை சரியான நபரிடம் சேர்க்கவும், வங்கிகள், மியூசுவல் ஃபண்டுகள், நிலையான வைப்புத்தொகை கணக்கு உட்பட அனைத்து வகையான முதலீடுகள் மற்றும் காப்பீடுகளில் ஒரு நாமினி  நியமனத்தை வைத்திருப்பது அவசியம். 

ஆனால் வங்கிக் கணக்கைத் திறக்கும்போதோ அல்லது முதலீடு மற்றும் காப்பீடு வாங்கும்போதோ நாமினிப் பத்தியை காலியாக விடுகிறோம். பல ஆண்டுகளாக நாமினி பெயரை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கி மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதை மனதில் வைத்து, நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு சிறப்பு வசதியைத் தொடங்கியுள்ளது.

அந்த வசதியின் கீழ், பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) அதாவது எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்கில் நாமினி பெயரை எளிதாக சேர்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இணைய வங்கி (Internet Banking) மூலம் தங்கள் கணக்கில் நாமினி பெயரை சேர்க்கலாம். வாடிக்கையாளர் விரும்பினால், வங்கிக் கிளைக்குச் சென்றும் இந்த வேலையைச் செய்யலாம்.

எஸ்பிஐ ட்வீட்:

எஸ்பிஐ தனது ட்வீட்டில் இது பற்றிய தகவல்களை அளித்துள்ளது. கணக்கு வைத்திருப்பவர் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் நாமினி பெயரைச்  சேர்த்துக்கொள்ளலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு வங்கி தெரிவித்துள்ளது. இதற்காக நீங்கள் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளது.

ALSO READ: SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! வீடு, வாகனக் கடன் வட்டி, EMI குறையும்

ஏன் நாமினி அவசியமானது (why nomination is necessary)

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), உங்கள் வங்கிக் கணக்கில் நாமினி பெயரை சேர்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. நீங்கள் ஒரு புதிய வங்கிக் கணக்கைத் திறந்தால், அதற்கு ஒரு நாமினி பெயரைப் போடுவது அவசியம். ஆனால் உங்களிடம் பழைய வங்கிக் கணக்கு இருந்தால், அதில் நாமினி பெயரை சேர்க்கவில்லை என்றால், தற்போது நாமினி பெயரைச் சேர்ப்பது முக்கியம். ஒரு வகையில், இது உங்கள் குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசம் போன்றது. துரதிருஷ்டவசமாக, ஏதேனும் சம்பவம் நடந்தால், கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை நாமினிக்கு மட்டுமே வழங்கப்படும்.

உங்கள் வங்கிக் கணக்கில் நாமினி பெயர் இல்லை என்றால், வைப்புத் தொகையைப் பெறுவது மிகவும் கடினமாகிவிடும். இதற்கான சட்ட நடவடிக்கை மிக நீண்டது. எனவே, வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் போது, ​​மியூசுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீடு செய்யும் போது அல்லது காப்பீட்டு பாலிசியை எடுக்கும்போது கண்டிப்பாக நாமினி பெயரைச் சேர்க்கவும்.

யாரை நாமினியாக சேர்க்க முடியும் (Who can make a nominee)

நீங்கள் திருமணமானவராக இருந்தால், கணவரின் பெயரையோ அல்லது மனைவியின் பெயரையோ நீங்கள் நாமினியாக போடலாம். அதேபோல உங்கள் குழந்தை, பெற்றோர், குடும்ப உறுப்பினர் அல்லது உங்களுக்கு நெருங்கிய ஒரு நண்பரை பரிந்துரைக்கலாம். 

காப்பீட்டு பாலிசியை (Insurance policy) எடுக்கும்போது நாமினியின் பெயரை குறிப்பிட வேண்டியது அவசியம். நீங்கள் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினியையும் குறிப்பிடலாம். மேலும் நீங்கள் விருப்பப்பட்டால் நாமினியின் பெயரையும் மாற்ற முடியும். இதில் எந்த விதிமுறையும் இல்லை. 

ALSO READ: October 1 முதல் இந்த வங்கிகளின் செக் புக் செல்லாது: புதிய செக் புக் பெறுவது எப்படி? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News