Old Pension சூப்பர் செய்தி: இவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், NPS ரத்து!!

Old Pension Scheme: இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பணியை ராஜினாமா செய்த அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 15, 2023, 10:13 AM IST
  • பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
  • என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள் என்ன?
  • இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்?
Old Pension சூப்பர் செய்தி: இவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், NPS ரத்து!! title=

பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: கடந்த ஓராண்டில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை பல மாநில அரசுகள் மீண்டும் அமலுல்படுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக கடந்த சில மாதங்களாக பல போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து அவ்வப்போது பல வித புதுப்பிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

மாநிலங்களை பொறுத்த வரையில் ராஜஸ்தானின் அசோக் கெலாட் அரசுதான் முதன்முதலில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்தியது. சமீபத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்த ராஜஸ்தான் மாநில சாலை போக்குவரத்து கழகம் (ஆர்எஸ்ஆர்டிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர்கள்

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பணியை ராஜினாமா செய்த அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, பழைய ஓய்வூதிய விருப்பத்தை தேர்வு செய்ய விரும்பும் ஊழியர்கள், ஜூன் 30 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் சிபிஎஃப் திட்டத்தில் உறுப்பினராக கருதப்படுவார்கள்.

மேலும் படிக்க | Old Pension Scheme சூப்பர் அப்டேட்: முக்கிய கூட்டம்.... விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி

குடும்ப உறுப்பினர்களும் விண்ணப்பிக்கலாம்

இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களும் குடும்ப ஓய்வூதியத்திற்காக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். வாரியங்கள், கார்ப்பரேஷன்கள், அட்டானமஸ், செமி அட்டானமஸ் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் (ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு நிறுவப்பட்டவை) பணிபுரியும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த மாநில நிதித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்காத ஊழியர்களின் பங்களிப்பு, பல்கலைக்கழகங்களின் முறைப்படி செய்யப்படும். அதாவது, முதலாளியின் பங்கு மற்றும் பணியாளரின் பங்கில் இருந்து தலா 12% செலுத்த வேண்டும். முதலாளியின் பங்கு ஓய்வூதிய நிதிக்கும், பணியாளரின் பங்கு ஜிபிஎஃப் (GPF) நிதிக்கும் செல்லும்.' என்று கூறினார்.

பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பணி ஓய்வுக்கு பின், ஊழியர் சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறுகிறார். பழைய ஓய்வூதியத்தின் கீழ் ஜிபிஎஃப் என்ற விதிமுறை உள்ளது. இத்திட்டத்தில், பணியாளர் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறும் வசதி உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அரசின் கருவூலத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்கள் விதிகளின்படி ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்கள்.

என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள்

என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதித் திட்டத்தின் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.

என்பிஎஸ் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்

ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பான திட்டமாகும். இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நீங்கள் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஓய்வூதியம் பெறுவோருக்கு சூப்பர் செய்தி... வருகிறது மாற்றம் - இனி கவலையே இல்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News