சூப்பர் செய்தி!! ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் கிடைக்கும்.. அரசு எடுத்த நடவடிக்கை

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றுத் திட்டத்தைத் தயாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் பிரபலமாக்க இந்தக் குழு இப்போது செயல்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 15, 2023, 06:55 AM IST
  • என்பிஎஸ் -இல் உள்ள தற்போதைய ஏற்பாடு என்ன?
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அமைப்பு என்ன?
  • பழைய ஓய்வூதியத்திற்கு ரிசர்வ் வங்கி கொடுத்த எச்சரிக்கை என்ன?
சூப்பர் செய்தி!! ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் கிடைக்கும்.. அரசு எடுத்த நடவடிக்கை title=

பழைய ஓய்வூதிய திட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அதிகப்படியான பலன்களை அளிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. தற்போது இது குறித்த ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.

அரசாங்கத்தின் சமீபத்திய புதுப்பிப்பின் படி, இப்போது பழைய ஓய்வூதிய பலன்கள் புதிய ஓய்வூதிய திட்டத்திலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பு தொடர்பான முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். 

அரசு ஊழியர்களுக்காக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. இப்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே (என்பிஎஸ்) புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்கும் என கூறப்படுகின்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றுத் திட்டத்தைத் தயாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் பிரபலமாக்க இந்தக் குழு இப்போது செயல்படும்.

இதில் உத்தரவாதமான வருமானம் இருக்கும், கூடுதல் வருமானம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  இதனுடன், அரசின் பங்களிப்பை 14% வரை உயர்த்தும் திட்டமும் உள்ளது. தேசிய ஓய்வூதிய முறை அல்லது புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக புதிய ஏற்பாடு செய்யப்படும். மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த அமைப்பு இருக்கும் என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றி நடக்கும் விவாதம் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பல நாட்களாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இப்போது மத்திய அரசும் இது குறித்து பரிசீலித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்கவில்லை. மாறாக, புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உத்தரவாதமான வருமானம் குறித்து நிதி அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இப்போது விஷயம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத்தின் பலன்களை புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே சேர்க்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் என்ன நன்மைகளை காணலாம்?

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில், குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் இப்போது பரிசீலித்து வருகிறது. இதில், ஓய்வூதியதாரர்களின் கூடுதல் வருவாய் குறித்தும் கவனம் செலுத்தப்படும். இதனுடன், அரசின் பங்களிப்பை 14%க்கும் அதிகமாக உயர்த்தும் திட்டமும் உள்ளது. எனினும், கருவூலத்திற்குச் சுமை ஏற்படாமல் பங்களிப்பை அதிகரிக்க வழி காணப்படுகின்றது. ஓய்வூதியத்தை அதிகரிக்க, வருடாந்திரத்தில் அதிக முதலீடு செய்யலாம். தற்போது, ​​மொத்த நிதியில் 40% வருடாந்திரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது, அதில் இருந்து கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் 35% ஓய்வூதியமாக பெறப்படுகிறது. இருப்பினும், இது சந்தையுடன் இணைக்கப்படுவதால் இதற்கான உத்தரவாதம் இருக்காது.

மேலும் படிக்க | மகிழ்ச்சி செய்தி!! மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்... பணிகளை துவக்கியது அரசு

என்பிஎஸ் -இல் உள்ள தற்போதைய ஏற்பாடு என்ன?

அடிப்படைச் சம்பளத்தில் 10% ஊழியரின் பங்களிப்பாகவும், 14% அரசாங்கம் மூலமாகவும் வழங்கப்படுகின்றன. மொத்தத்தில், அடிப்படை சம்பளத்தில் 24% ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்படுகிறது. நிதி மேலாளர்கள் பங்கு மற்றும் கடன் நிதிகளில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இருப்பினும், பங்குகள் மற்றும் கடனில் உள்ள முதலீட்டின் சதவீதம் பணியாளரால் தீர்மானிக்கப்படுகிறது. ஓய்வு பெறும் போது 60% தொகையை திரும்பப் பெறலாம். அதேசமயம், 40% தொகை வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது. ஓய்வு பெறும் போது எடுக்கப்படும் பணத்திற்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அமைப்பு என்ன?

பழைய ஓய்வூதிய திட்டத்தில், அரசு கருவூலத்தில் இருந்து பணம் வழங்கப்படுகிறது. இதில், பணியாளர் கடைசியாக பெற்ற சம்பளத்தில் பாதிக்கு இணையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணியாளரின் மரணத்திற்குப் பிறகு, வாழ்க்கைத் துணைவருக்கும் ஓய்வூதிய பலன் கிடைக்கும். 6 மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்தப்பட்ட டிஏ பெறுவதற்கான விதிமுறையும் இதில் உள்ளது. அதாவது, அகவிலைப்படி அதிகரிக்கும் போது, ​​அதன் பலனும் ஓய்வூதியத்தில் வழங்கப்படும். அரசு ஊழியர் தன் தரப்பில் இருந்து எந்த பங்களிப்பும் செய்ய வேண்டியதில்லை. அரசு புதிய ஊதியக் குழுவை அமல்படுத்தும்போது, அதன் பலனாலும் ஓய்வூதியம் அதிகரிக்கப்படுகின்றது. 

பழைய ஓய்வூதியத்திற்கு ரிசர்வ் வங்கி கொடுத்த எச்சரிக்கை என்ன?

பழைய ஓய்வூதியம் தொடர்பாக பல வாதங்கள் உள்ளன. இதற்கு ஆர்பிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் கருவூலத்தின் மீதான சுமை அதிகரித்து வருவதாக சில காலத்திற்கு முன்பு ரிசர்வ் வங்கியும் எச்சரிக்கை விடுத்தது. இது வளர்ச்சிப் பணிகளுக்கான செலவைக் குறைக்கிறது, இது பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்தது. கடனில் சிக்கித் தவிக்கும் மாநிலங்களுக்கும் பழைய ஓய்வூதியம் ஒரு பிரச்சனையாக இருக்கும். இது கடனில் சிக்கியுள்ள மாநிலங்களின் நிதிச் செலவை மேலும் அதிகரிக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

மேலும் படிக்க | ஜாக்பாட் செய்தி: இந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்.. DoPT அளித்த தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News