7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட், டிஏ ஹைக் புதிய ஃபார்முலா... அட்டகாசமான அப்டேட் இதோ

7th Pay Commission: இப்போது அகவிலைப்படி கணக்கிடப்படும் முறை மாறும். அதன் கீழ் ஊழியர்கள் அதிக நன்மைகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2023, 08:55 AM IST
  • அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியாகும்.
  • இதன் விளைவாக, அவர்களின் சம்பளம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதிகரித்து வருகிறது.
  • மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை அதிகரிக்கிறது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட், டிஏ ஹைக் புதிய ஃபார்முலா... அட்டகாசமான அப்டேட் இதோ title=

டிஏ ஹைக், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியின் பலனை வழங்குகிறது. விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க, அவற்றுக்கான தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. இதில் தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. அகவிலைப்படியை அதிகரிக்க அரசாங்கம் இப்போது புதிய சூத்திரத்தை அமல்படுத்தவுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவிகித அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். ஜனவரி 2023 -இல் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. அதுவரை 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி அதன் பிறகு 42 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2023 -இல் வந்தது. அகவிலைப்படியில் அதிகரிப்பு 7 ஆவது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் அடிப்படையில் நடக்கின்றது.

அடுத்தாக, ஜனவரி முதல் மே வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் முடிவுகளின் அடிப்படையில் அரசாங்கம் அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பை அறிவிக்கக்கூடும். இம்முறை அரசாங்கம் அகவிலைப்படியை 3 சதவிகிதம் அதிகரிக்கும் என ஒரு சாராரும் 4 சதவிகிதம் அதிகரிக்கும் என ஒரு சாராரும் தெரிவித்து வருகின்றனர். 

இந்த முறை தொழிலாளர் அமைச்சகம் அகவிலைப்படி கணக்கீட்டை மாற்றியுள்ளது. மத்திய அரசு (Central Government) ஊதிய விகிதக் குறியீட்டை (WRI) 1963-65=100 என்ற அடிப்படையிலிருந்து 2016=100 ஆக மாற்றியது. மேலும் 2016 இல் அகவிலைப்படியின் அடிப்படையில் ஊதிய விகிதக் குறியீடுகளின் புதிய தொடரைத் திருத்தி வெளியிட்டது.

இதன் பொருள் என்னவென்றால், இப்போது அகவிலைப்படி கணக்கிடப்படும் முறையும் மாறும். அதன் கீழ் ஊழியர்கள் அதிக நன்மைகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஊதிய விகிதக் குறியீட்டின் புதிய தொடர் அதாவது, 2016=100 ஆனது ஏறக்குறைய ஆறு தசாப்தங்கள் பழமையான பழைய தொடரை (1963-65=100) மாற்றியுள்ளது. இது தொழில்களின் எண்ணிக்கை, மாதிரி அளவு, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்துறைகளின் கீழ் உள்ள தொழில்கள், தொழில்களின் வெயிட்டேஜ் போன்றவற்றின் நோக்கத்தையும் கவரேஜையும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: இன்னும் 2 நாட்களில் மிகப்பெரிய அப்டேட்... இரட்டை ஜாக்பாட் கிடைக்கும்

அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியாகும். இதன் விளைவாக, அவர்களின் சம்பளம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதிகரித்து வருகிறது.மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை அதிகரிக்கிறது.அரசு அளிக்கும் டிஏ உயர்வு (DA Hike) நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரே அளவில் இருப்பதில்லை. அனைத்து ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வெவ்வேறு என்று கூறப்படுகிறது.

தகவலின்படி, AICPI குறியீட்டின் தரவுகளின்படி, ஜனவரி மற்றும் ஜூலை இடையே அகவிலைப்படி அதிகரிப்பு 3 அல்லது 4 சதவிகிதமாக இருக்கலாம். அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்ந்தால் மொத்த அகவிலைப்படி 45% ஆகவும் 4 சதவிகிதம் உயர்ந்தால் மொத்த அகவிலைப்படி 4% ஆகவும் அதிகரிக்கும். அதிகாரப்பூர்வமாக இது அறிவிக்கப்பட்ட பின்னர்தான் இதுகுறித்த தெளிவு இருக்கும். அகவிலைப்படி அதிகரிப்பின் மூலம் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 48 லட்சம் ஊழியர்களும் பயனடைகின்றனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் / ஓய்வூதியத்தின் மதிப்பில் பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு நிவாரண நடவடிக்கையாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை வழங்குகிறது. 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த சூத்திரத்தின்படி DA/DR உயர்வு அறிவிக்கப்பட்டுகிறது.

ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... குழந்தைகள் கல்வி உதவித்தொகை - இதை மட்டும் செய்ய வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News