சீனியர் சிட்டிசன்ஸ் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டம் : முதலீடு என்பது அனைவரது வாழ்விலும் ஒரு மிக முக்கியமான அம்சமாகும். இதில் ஆண்கள் பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை. அனைவருக்கும் பணத்தை சேமிப்பது போல, பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து அதை பெருக்குவதும் மிக அவசியம். குறிப்பாக பணத்தை பாதுகாப்பாக வைத்து சிறந்த வருமானத்தை அளிக்கும் முதலீட்டு திட்டங்களையே தேர்ந்தெடுக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். இப்படிப்பட்ட பல திட்டங்கள் தபால் நிலையத்தில் உள்ளன.
பல வகையான சேமிப்புத் திட்டங்கள் இந்திய அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. இந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்து கோடிக்கணக்கான மக்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அஞ்சல் அலுவலகத்தில் பாதுகாப்பான வழியில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்து வகுப்பினருக்குமானது. குழந்தைகள், பெண்கள், ஊழியர்கள், வணிகர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவருக்கும் பிரத்யேகமான திட்டங்கள் உள்ளன. அரசின் இந்த திட்டங்கள் சாமானிய மக்கள் எதிர்காலத்திற்காக பெரிய தொகையை சேமிக்க உதவுகின்றன.
இந்நிலையில் தற்போது தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக இருக்க அறிமுகம் செய்த திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் சீனியர் சிட்டிசன் சேவிங்க்ஸ் ஸ்கீம் ஆகும். இதில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், வட்டி விகிதம் எவ்வளவு என்ன, லாக்-இன் காலம் பற்றியெல்லாம் பார்க்கலாம்.
மேலும் படிக்க | இன்டர்வியூ போறீங்களா? ‘இதை’ கொண்டு போனால் கண்டிப்பா செலக்ட் ஆகலாம்..
இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்துத் தொடங்கலாம். இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய கட்டாயம் 60 வய அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். எனினும் விஆர்எஸ் (VRS) எடுக்கக்கொண்ட நபர்கள் அதாவது 55 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது தவிர ராணுவ வீரர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும். அதாவது நீங்கால் ஒரு ராணுவ வீரரால் இருந்தால் 50 வயதிலிருந்தே இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
8.2 சதவீத வட்டியை வழங்குகிறது :
இந்த திட்டமானது அரசாங்க திட்டமாகும், அதுமட்டுமின்றி இதில் வட்டி விகிதமும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டியை வழங்குகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் எவ்வளவு அதிகமாக நீங்கள் முதலீடு செய்கிறீர்களே அவ்வளவு அதிகமாக லாபம் கிடைக்கும். மேஉமி இதில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மாதம் 20,000 ரூபாய் எப்படி பெறுவது ?
மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் ரூ.30 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்து வந்தால், ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி தரப்படும். மாதாந்திர அடிப்படையில் 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம். காலாண்டுக்கு ஒருமுறை இந்த பணத்தை எடுத்தால், உங்களுக்கு ரூ.61,500 கிடைக்கும். அதேபோல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால், காலாண்டு கணக்கின் படி, ரூ.10,250 கிடைக்கும். வரி செலுத்தும் போது இந்த திட்டத்தில் நீங்கள் அற்புதமான பலனைப் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு வழங்கப்படும். மேலும் இக்கணக்கை தொடங்க நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.30 லட்சம் வரை ஒரே தொகையாக மொத்தமாக டெபாசிட் செய்யலாம். அதுவும் அருகில் உள்ள தபால் அலுவலகக் கிளைகளில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கைத் தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7வது ஊதியக் குழு.. ஊழியர்களுக்கு ஜாக்பாட், அகவிலைப்படி இந்த தேதியில் உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ