SeePic- ரோடு முழுக்க ட்ராஃபிக்! ஆபீஸுக்கு வினோதமாய் வந்த டெக்கீ!!

போக்குவரத்து நெரிசலால், வாகனத்திற்குப் பதிலாக குதிரையில் ஆபீஸுக்கு வந்த இளைஞரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது!

Last Updated : Jun 16, 2018, 11:26 AM IST
SeePic- ரோடு முழுக்க ட்ராஃபிக்! ஆபீஸுக்கு வினோதமாய் வந்த டெக்கீ!! title=

போக்குவரத்து நெரிசலால், வாகனத்திற்குப் பதிலாக குதிரையில் ஆபீஸுக்கு வந்த இளைஞரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது!

நாம் அனைவரும் காலையில் வேலைக்கு செல்லும்போது சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலில் பாதி மோருமையை இழந்து விடுவோம். ஏனென்றால், வாகன உபயோகம் தற்போது அதிகரித்து விட்டது.  

நாம் அனைவருக்கும் நமது கடைசி வேலைநாளில் நிறைய மறக்க முடியாத சம்பவங்களை பெறுவோம். நம்மிடம் பல வருடம் பழகிய ஆபீஸ் நண்பர்களை பிரிந்து போகும் சோகம் போன்ற பல நிகவுகளை நாம் பெறுவோம். அதுமட்டும் இன்றி நாம் இங்கு வேலை செய்ததை யாரும் மறக்க கூடாது என்பதற்காக பல வினோதமான காரியங்களையும் ஐடியாகளையும் நாம் யோசித்து வைப்பது உண்டு. 

இது போன்று தனது கடைசி வேலை நாள் அன்று ஆபீஸுக்கு விசித்திரமான முறையில் வந்துள்ளார் பெங்களூருவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர். பெங்களூருவில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் கம்ப்யூட்டர் இன்ஜினீயராகப் பணியாற்றிவருபவர், ரூபேஷ்குமார். இவர், தினமும் தனது வாகனத்தில் அலுவலகத்துக்கு வந்து சென்றார். ஆனால், பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலால் தினமும் அலுவலகத்துக்கு வந்து போவதில் ரூபேஷுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் தனது வேலையை உதறித்தள்ளிவிட்டு, சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க முடிவெடுத்து வேலையை ராஜினாமா செய்துள்ளார். நேற்று கடைசி நாள் அலுவலகத்துக்குக் கிளம்பிய அவர், பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக `last working day as a software engineer' என்ற பலகையை மாட்டிக் கொண்டு குதிரையில் அமர்ந்து அலுவலகம் சென்றுள்ளார். 

ரூபேஷ்குமார் குதிரையில் ஆபீஸ் செல்வதைப் பார்த்த பலரும் அதைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பிகைப்படம் சிறிது நேரத்திலேயே வைரலாகப் பரவியது. அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!

 

Trending News