ஜனவரி மாதத்தில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையா?

டிசம்பர் மாதத்தில் அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஜனவரி மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 25, 2022, 12:54 PM IST
  • ஜனவரி மாதம் 11 நாட்கள் விடுமுறை.
  • வங்கி விடுமுறையை அறிவித்தது ஆர்பிஐ.
  • முன்கூட்டியே வங்கி வேலைகளை முடித்து கொள்ளுங்கள்.
ஜனவரி மாதத்தில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையா? title=

வங்கி விடுமுறைகள் சிலவற்றை அரசாங்கம் நிர்ணயிக்கிறது, ஆனால் அதே சமயம் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் தேசிய விடுமுறை நாட்களில் மூடப்படும்.  ஒவ்வொரு மாததமும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதற்கான விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது.  வங்கிகளின் விடுமுறை நாட்களை மக்கள் தெரிந்து கொள்வதன் மூலம் அவர்கள் அந்த நாட்களில் வங்கிக்கு சென்று வீணாக அலைந்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.  டிசம்பரில், அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது, தற்போது ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது ஜனவரி மாதத்தில் எந்தெந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை பற்றி இங்கு காண்போம்.

மேலும் படிக்க | இதை செய்யாவிட்டால் பான் கார்டு அம்போ... உடனே கவனிங்க!

ஜனவரி 2023 வங்கி விடுமுறை நாட்கள்:

1) ஜனவரி 2, 2023 - திங்கள், புத்தாண்டு கொண்டாட்டம் (ஐஸ்வால்)

2) ஜனவரி 3, 2023 - செவ்வாய், இமோயினு இரட்பா (இம்பால்)

3) ஜனவரி 4, 2023 - புதன், கான்-ங்காய் (இம்பால்)

4) ஜனவரி 26, 2023 - வியாழன், குடியரசு தினம்

சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகள்:

1) ஜனவரி 1, 2023 - ஞாயிறு

2) ஜனவரி 8, 2023 - ஞாயிறு

3)  ஜனவரி 14, 2023 - இரண்டாவது சனிக்கிழமை, மகர சங்கராந்தி

4) ஜனவரி 15, 2023 - ஞாயிறு, பொங்கல்

5) ஜனவரி 22, 2023 - ஞாயிறு

6) ஜனவரி 28, 2023 - நான்காவது சனிக்கிழமை

7) ஜனவரி 29, 2023 - ஞாயிறு

மேலும் படிக்க | இவர்கள் ஆதார் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்! ஆதார் ஆணையம் அறிவுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News