பத்ரிநாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டதில், சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.'
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது பத்ரிநாத் கோவில். இந்துக்களின் மிக முக்கியமான புனித நகரம் கேதார்நாத். இது வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த விஷ்ணு கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் 4 புனித தலங்களில் இக்கோவிலும் ஒன்று.
நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது.
இந்நிலையில் 6 மாதத்திற்குப் பிறகு இன்று அதிகாலை 4.15 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆளுநர் பேபி ராணி மயூர்யா, முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் போன்ற முக்கிய பிரமுகர்களும் இன்று சாமி தரிசனம் செய்தனர்.