குரு உதயம் மார்ச் 2022: குரு உதயம் மார்ச் 26 அன்று அதாவது இன்று கும்ப ராசியில் நடக்க உள்ளது. வியாழன் கிரகத்தின் உதயம் மாலை 06.38 மணிக்கு நிகழும். ஒரு கிரகம் அஸ்தமனமானால், அதன் பலன் குறையத் தொடங்குகிறது. வியாழன் கிரகத்தின் அஸ்தமனம் 12 ராசிகளையும் பாதிக்கிறது. ஒரு கிரகம் உதயமாகும் போது, மக்களின் தலைவிதி மாறத் தொடங்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில் குருவின் உதயம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எனவே கும்ப ராசியில் குரு உதயமாவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இன்னல்கள் ஏற்படக்கூடும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
கடகம்: குரு உங்கள் ராசியிலிருந்து எட்டாவது வீட்டில் உதயமாகிறார். குருவின் உதயத்தால் உங்கள் மனதில் குழப்பம் ஏற்படலாம். இந்த நேரத்தில், ஆரோக்கியத்தில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம், எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட இந்த ராசிக்காரர்களுக்கு குரு உதயத்திற்குப் பிறகு இடமாற்றம் ஏற்படலாம், அதே போல் சிலருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வேலை மாற்றம் நேரிடலாம். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி: குரு உங்கள் ராசியிலிருந்து ஆறாம் வீட்டில் உதயமாகிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு தேவையற்ற சிரமங்களை தரலாம், எனவே கவனமாக இருங்கள். கன்னி ராசிக்காரர்கள் பணியிடத்தில் தேவையற்ற பாலிடிக்ஸ் இல் இருந்து விலகி இருக்கவும். மார்பு மற்றும் தொண்டை தொடர்பான சில உடல்நலப் பிரச்சனைகளும் இந்த ராசிக்காரர்களை பாதிக்கலாம். சரியான நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். சமூக மட்டத்தில், இந்த நேரத்தில் நீங்கள் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் அவதூறு ஏற்படலாம். இருப்பினும், உங்கள் மாமியார் வீட்டாரிடமிருந்து பணப் பலன்களைப் பெறலாம்.
கும்பம்: குரு உங்கள் சொந்த ராசியில் உதயமாகுகிறார். எனவே இந்த நேரம் உங்களுக்கு மிகவும் மோசமான நேரமாக கருதப்படும். இந்த ராசிக்காரர்காரர்கள் உடல் பருமன் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்கள் அதீத நம்பிக்கையை தவிர்க்க வேண்டும். வியாழனின் எழுச்சி உங்கள் திருமண வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த ராசிக்காரர்கள் சிலர் இந்தக் காலத்தில் ஆன்மீகப் பாதையிலும் செல்லலாம்.
மீனம்: குரு உங்கள் சொந்த ராசிக்கு அதிபதி, பன்னிரண்டாம் வீட்டில் உதயமாகுகிறார். ஜோதிடத்தில், பன்னிரண்டாவது வீடு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை, இது செலவு வீடு என்று அழைக்கப்படுகிறது. எனவே, குரு உதயத்திற்குப் பிறகு, உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம், இந்த செலவுகள் தேவையற்றதாக இருக்காது, ஆனால் அவை உங்கள் பட்ஜெட்டை பாதிக்கலாம். மீன ராசிக்காரர்கள் இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் உடல்நிலை மோசமடையக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR