புதுடெல்லி: முழு முதல் கடவுளான கணபதியின் ஆசி இல்லாமல் எந்த ஒரு சுப காரியமும் தொடங்குவதில்லை. இன்னல்களை வெல்ல நமக்கு அருள் புரியும் விநாயகப் பெருமானுக்கு உகந்த நாள் இன்று.
தை மாதத்தின் வளர்பிற சதுர்த்தி நாளான இன்று, விக்னங்களை அறுக்கும் விநாயகருக்கு உகநத தினம், இந்த நாள் மிகவும் விஷேசமானது.
இந்த ஆண்டு கணேஷ் ஜெயந்தி (Ganesh Jayanthi) இன்று, அதாவது 4 பிப்ரவரி 2022 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. தும்பிக்கை கடவுளின் ஆசியைப் பெற, இந்த நாளில் சில தவறுகளைச் செய்யக்கூடாது. இன்று செய்யும் சில தவறுகள், வாழ்நாள் முழுவதும் கவலையை கொடுக்கும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.
இன்று இதை செய்யவேண்டாம்
மற்ற விரதப் பண்டிகைகளைப் போலவே, கணேஷ் ஜெயந்தியைக் கொண்டாடுவது தொடர்பாக மத நூல்களில் சில விதிகள் கூறப்பட்டுள்ளன. வாழ்வில் தொல்லைகள், இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
ALSO READ | தடுப்பூசி கணபதியாக அவதாரம் எடுத்த விக்ன விநாயகர்
துளசி மிகவும் புனிதமானது என்றாலும், இன்று விநாயகப் பெருமானுக்கு துளசியை மறந்து அர்ப்பணம் செய்ய வேண்டாம்.
இன்று விநாயகரின் பின்புறத்தை பார்க்க வேண்டாம். வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு இதுவே காரணமாக அமையும்.
இன்று வானில் உதிக்கும் சந்திரனைபார்க்க வேண்டாம். அது உங்கள் வாழ்க்கையில் நிம்மதியைக் குலைக்குக்ம்
இன்று கருப்பு ஆடை அணிய வேண்டாம்.
ALSO READ | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு; இது விநாயகரின் சதுர்த்தி திருநாள்
விநாயக ஜெயந்தி (Ganesh Jayanthi) அன்று கேரட், முள்ளங்கி போன்ற கிழங்கு காய்களை உட்கொள்ள வேண்டாம். இன்றைய தினம், அசைவ உணவு, மதுவை தவிர்க்கவும்.
கணேச ஜெயந்தி அன்று விநாயகப் பெருமானை வழிபடும் போது, வலது பக்கம் தும்பிக்கை வைத்துள்ள சிலையை வணங்கக் கூடாது.
மஞ்சளில் இருந்து பிள்ளையான பார்வதி மைந்தன் கஜமுகன் கணபதிக்கு உகந்த நாள் இன்று. 2022ஆம் ஆண்டு தை மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளான இன்று முழுமுதற் கடவுளுக்கு உகந்ததைச் செய்து வாழ்வில் வளம் பெறுவோம்.
(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை)
ALSO READ | 5 புகழ்பெற்ற கணபதி கோவில்களின் போட்டோ தொகுப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR