29 ஆண்டுகளுக்குப் பிறகு, 'சனி-சூரியன்' இன்று சந்திப்பு; எந்த ராசிக்கு சூப்பர்

கிரகங்களின் ராஜாவான சூரியனும் நீதியின் கடவுள் சனியும் இன்று மகர ராசியில் இணையவுள்ளனர். 29 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 2 சக்தி வாய்ந்த கிரகங்கள் ஒரே ராசியில் இணைவது அனைத்து ராசிகளிலும் மிகவும் ஈர்க்கக்கூடிய விளைவை ஏற்படுத்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2022, 10:31 AM IST
  • 29 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அரிய தற்செயல் நிகழ்வு
  • மகர ராசியில் சூரியனும் சனியும் சந்திக்கும்
  • அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
29 ஆண்டுகளுக்குப் பிறகு, 'சனி-சூரியன்' இன்று சந்திப்பு; எந்த ராசிக்கு சூப்பர் title=

புதுடெல்லி: இன்று மிகவும் சிறப்பான நாள். இன்று கிரகங்களின் அரசனான சூரியன் தனது சொந்த வீடான மகர ராசியில் தனது மகன் சனியை சந்திக்கிறார். 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய தற்செயல் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி சூரியன் தனது ராசியை மாற்றி மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த நேரத்தில் நீதி கிரகமாக கருதப்படும் சனி, ஏற்கனவே தனது சொந்த ராசியான மகரத்தில் இருக்கிறார். மகர ராசியில் சனி-சூரியன் சந்திப்பு இந்த அரிய சேர்க்கை அனைத்து ராசியிலும் பயனுள்ள விளைவை ஏற்படுத்தும். அடுத்த 1 மாதம் சூரியன் மகர ராசியில் இருப்பார். இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசி அறிகுறிகளையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் (Zodiac Sign) வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இல்லையெனில், பணியிடத்தில் தகராறுகள் ஏற்படுத்தும். மனைவியுடனான உறவிலும் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் பெரிய வெற்றியை அடைய நினைத்தால், அதற்கான திட்டத்தை வகுத்து, செயல்பட்டு முன்னேறுங்கள். சில பூர்வீகவாசிகள் வெளிநாடு செல்வார்கள் அல்லது வெளிநாட்டில் குடியேறலாம். தந்தையுடனான உரையாடலில் கவனமாக இருங்கள். 

ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க 

மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொழில் நன்றாக நடக்கும். தொழில் செய்பவர்களை விட வணிகர்களுக்கு நேரம் மிகவும் நல்லதாக இருக்கும். மன அழுத்தம் ஏற்படும்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் பணி வாழ்வில் சமநிலையை பேண வேண்டும். இல்லையெனில் உறவில் பிரச்சனைகள் வரலாம். வேலை விஷயத்தில் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியதிருக்கும். நிதானமாகவும் பொறுமையாகவும் வேலை செய்யுங்கள்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் இரண்டிலும் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். சாதனையையும் அடைவீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

கன்னி: இந்த நேரம் கன்னி ராசிக்காரர்களுக்கு கெடுதல்களை உண்டாக்கும், எனவே அபாயகரமான பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம். நிதானம் தேவை. 

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில் முன்னேற்றமாக இருக்கும். எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில மாற்றங்கள் இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். ஏமாற வாய்ப்பு உண்டு. 

தனுசு: தனுசு ராசிக்காரர்களும் தகாத பேச்சு, வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இந்த நிலை சேதத்தை ஏற்படுத்தும். இந்த நேரம் பண வரவு நேரமாகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் சவால்களை சந்திக்க நேரிடும். சரியான முடிவை எடுப்பது கடினமாக இருக்கும். இந்த நேரத்தை பொறுமையாக இருப்பது நல்லது. 

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியனும் சனியும் இணைவது டென்ஷனைத் தரும். மன அழுத்தத்தைத் தவிர்க்க, மந்திர உச்சரிப்பு அல்லது தியானத்தை நாடவும். 

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு பண ஆதாயம் உண்டாகும். ஆனால் பேசுவதில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது.

ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News