மக்களே உஷார்! நவம்பரில் இந்த 5 முக்கிய விதிகள் மாற்றம்!

நவம்பர் 1,2022 முதல் பல புதிய விதிகள் மற்றும் ஏற்கனவே திருத்தப்பட்ட சில விதிகள் என நிதியை குறைக்கக்கூடிய வகையிலான சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 7, 2022, 09:01 AM IST
  • ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட பிற கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரலாம்.
  • வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 7 நாட்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • ஆயுள் அல்லாத காப்பீட்டுக் கொள்கைகளை வாங்குவதற்கு இப்போது கேஒய்சி தேவைப்படுகிறது.
மக்களே உஷார்! நவம்பரில் இந்த 5 முக்கிய விதிகள் மாற்றம்! title=

- இந்திய ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூட்டத்தை நவம்பர் 3 ஆம் தேதி கூட்ட அறிவித்தது.  ரெப்போ விகிதம் 190 அடிப்படை புள்ளிகள் உயர்ந்தபோதிலும் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது, எனவே இந்த கூட்டத்தில் வட்டி விகித உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதன் பின்னர் வீட்டுக் கடன்கள் மற்றும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட பிற கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரலாம்.

- 2021-2022 நிதியாண்டிற்கான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, அக்டோபர் 30 முதல் நவம்பர் 7, 2022 வரை ஏழு நாட்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஏர்டெல், ஜியோ பயனர்கள் எச்சரிக்கை: 5ஜி போன்களை வாங்க வேண்டாம்!

- தனியார் கடன் வழங்கும் நிறுவனமான இண்டஸ்லேண்ட் வங்கி குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களுக்கு வட்டியில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.  இருப்பு தொகை பராமரிக்காதவர்களுக்கு முன்னர் 5% வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 6% வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, நவம்பர் 1 முதல் இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

- கொஞ்சம் ஆறுதலான விஷயமாக ஓஎம்சிகள் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை நவம்பர் 1 முதல் குறைப்பதாக அறிவித்தது.  முன்னர் 19-கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.115.50, விலை குறைப்பிற்கு பிறகு அதன் விலை ரூ.1,744 ஆகும்.  ஆனால் 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.1,053 என்கிற ஆக  விலையில் மாற்றம் இல்லை.

- ஐஆர்டிஏஐ-ன் காப்பீட்டு ஒழுங்குமுறையின்படி, ஆயுள் அல்லாத காப்பீட்டுக் கொள்கைகளை வாங்குவதற்கு இப்போது கேஒய்சி தேவைப்படுகிறது.  ஆயுள் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு அல்லாத உடல்நலம் மற்றும் வாகனக் காப்பீடு போன்றவற்றிற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள க்ளைம்களுக்கு கேஒய்சி தேவைப்பட்டது ஆனால் இனிமேல் நவம்பர் 1 முதல் இது அனைவருக்கும் தேவைப்படும்.

மேலும் படிக்க | EPFO புதிய விதிகள்: இனி PF கணக்குதாரர்களுக்கு இந்த வசதிகள் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News