தீராத பிரச்சனையா... கை மேல் பலன் கொடுக்கும் ‘5’ புதன் கிழமை பரிகாரங்கள்..!!

புதன் கிழமையில் செய்யும் சில விசேஷமான 5 பரிகாரங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றத்துடன்,  தீராத பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2021, 10:43 AM IST
தீராத பிரச்சனையா... கை மேல் பலன் கொடுக்கும் ‘5’ புதன் கிழமை பரிகாரங்கள்..!! title=

புதன்கிழமை விநாயகப் பெருமானை வழிபட சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. விநாயகர் இந்த நாளில் அவதரித்தார் என புராணங்கள் கூறுகின்றன. பார்வதி தேவி தன் கைகளால் கணேசபெருமானை உருவாக்கிய நாள் புதன்கிழமை என்றும் ஒரு கதை உண்டு. இந்தக் கோணத்திலும் புதன் கிழமை அன்று விநாயகரை வழிபடுவது சிறப்பு. புதன் கிழமையில் சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீரும் என்று ஆன்மீக நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உடல்நலக் கோளாறுகள், பொருளாதார முன்னேற்றம் உட்பட பல வகையான பிரச்சனைகளும் விலகும்.

செல்வத்திற்கான புதன் பரிகாரம்

பொருளாதார முன்னேற்றத்திற்கு புதன் மிகவும் அனுகூலமான சிறப்பான நாள். பொருளாதார முன்னேற்றம் பெற, புதன்கிழமையன்று பிராமணருக்கு  பச்சை பயிறு தானம் செய்யுங்கள். ஆனால், ராகுகாலத்தில் தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், ஒன்றரை கிலோகிராம் பச்சை பயிறை ஊறவைத்து  நெய் மற்றும் சர்க்கரை கலந்து காலை அல்லது மாலை பசுவிற்கு உணவாக கொடுக்கவும். இதனால் உங்கள் வருமானம் (Income) பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்

ALSO READ | செவ்வாய்ப் பெயர்ச்சி: இந்த ‘5’ ராசிக்கார்களுக்கு டிசம்பர் 5 வரை எச்சரிக்கை தேவை!

ஆரோக்கியத்திற்கான புதன்கிழமை பரிகாரம்

நல்ல ஆரோக்கியத்திற்காக, புதன் கிழமையன்று திருநங்கைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். தானமாக வழங்கும் துணியின் நிறம் பச்சையாக இருக்க வேண்டும். இது தவிர, முளை கட்டிய பச்சை பயிறையும் தானம் செய்ய வேண்டும்.

சிக்கலில் இருந்து விடுபட புதன் பரிகாரம்

தனிப்பட்ட அல்லது குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபட, புதன் கிழமையன்று கணபதிக்கு அருகம்புல் மாலை சாற்றவும். புதன் மட்டுமல்ல, தினமும் இப்படி செய்து வந்தால், விரைவில் பிரச்சனைகள் நீங்கும்.

வெற்றிக்கான புதன் பரிகாரம்

நீங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட வேலையிலும் வெற்றி பெற விரும்பினால், புதன்கிழமை, விதிமுறைப்படு விநாயகப் பெருமானை வணங்குங்கள். இது தவிர, வழிபாட்டின் போது, ​​அதர்வஷிர்ஷ  ஸ்தோத்திரத்தை கூறவு. கணபதி அதர்வஷீர்ஷ ஸ்தோத்திரம் அதர்வண வேதத்தின் முக்கிய ஸ்தோத்திரமாக கருதப்படுகிறது.

கணபதியின் அருள் பெற செய்ய வேண்டியது

விநாயகப் பெருமானின் அருளைப் பெற புதன்கிழமை சிறப்பான நாளாகக் கூறப்படுகிறது. இந்நாளில் காலையில் பசுவுக்கு பசும் புல் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புதன் தோஷத்தின் அசுப பலன்கள் விலகும். அதே நேரத்தில், மன நிம்மதியும் உற்சாகமும் கிடைக்கும்.

ALSO READ | டிசம்பரில் வரும் சூரிய கிரகணம் இந்த 5 ராசிகளை பாடாய் படுத்தும்: ஜாக்கிரதை!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News