எல்ஐசியின் அற்புதமான திட்டம்.. 1 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம், கட்டாயம் படிக்கவும்

LIC Jeevan Utsav: எல்ஐசி ஜீவன் உத்சவ் புதிய திட்டத்தில், பிரீமியம் செலுத்தும் காலத்தை முடித்த பிறகு, எல்ஐசி உறுதி செய்யப்பட்ட தொகையில் 10 சதவீத நன்மையை வழங்குகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 19, 2023, 04:52 PM IST
  • LIC Jeevan Utsav திட்டத்தின் சிறப்புகள்.
  • எல்ஐசி சமீபத்தில் கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டத்தைஅறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த திட்டத்தில், 10 சதவீத வருமான சலுகையும் எல்.ஐ.சி., வழங்குகிறது.
எல்ஐசியின் அற்புதமான திட்டம்.. 1 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம், கட்டாயம் படிக்கவும் title=

எல்ஐசி ஜீவன் உத்சவ் திட்டம்: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி சமீபத்தில் கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டத்தை 'எல்ஐசி ஜீவன் உத்சவ்' அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஐசியின் இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், குறிப்பிட்ட காலத்திற்கு பிரீமியத்தை செலுத்திய பிறகு, உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில், 10 சதவீத வருமான சலுகையும் எல்.ஐ.சி., வழங்குகிறது.

LIC Jeevan Utsav திட்டத்தின் சிறப்புகள்:
எல்ஐசி ஜீவன் உத்சவ் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் பிரீமியம் செலுத்தும் காலம் 5 முதல் 16 ஆண்டுகள் ஆகும். அதாவது பாலிசியின் பிரீமியத்தை குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்தும் காலத்தைப் பொறுத்து சில ஆண்டுகள் காத்திருந்த பிறகு பாலிசியின் பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள்.

மேலும் படிக்க | உங்களின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய முடியும்?

அதுமட்டுமின்றி இந்த பாலிசியில் இறப்பு பலனும் வழங்கப்படுகிறது. பாலிசி காலத்தின் போது தனிநபர் ஒருவர் இறந்தால், அடிப்படைத் தொகை அல்லது வருடாந்திர பிரீமியத்தின் 7 மடங்கு அதிகமாக இருந்தால் அது செலுத்தப்படும். இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட பிரீமியத்தின் 105 சதவீதத்துக்குக் குறையாமல் இறப்பு பலன் கிடைக்கும். அடிப்படை காப்பீட்டுத் தொகை அல்லது ஆண்டு பிரீமியத்தின் 7 மடங்கு இதில் எது அதிகமோ அது இறப்புக் காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்படும். அதே நேரத்தில், பாலிசி காலம் முடிந்த பிறகு நபர் உயிர் பிழைத்தால், ஒவ்வொரு ஆண்டும் வழக்கமான மற்றும் நெகிழ்வு அடிப்படையில் அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் வருமானப் பலன் வழங்கப்படும். எல்ஐசி ஜீவன் உத்சவில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக இருக்கும்.

ஒரு லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி:
எடுத்துக்காட்டாக, நீங்கள் 25 வயதுடையவராக இருந்து, ரூ. 10 லட்சம் காப்பீட்டுத் தொகை மற்றும் 12 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தும் எல்ஐசி ஜீவன் உத்சவ் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால். இந்த திட்டத்தில் நீங்கள் 36 ஆண்டுகள் வரை (பிரீமியம் செலுத்தும் காலம் 12 ஆண்டுகள்) பிரீமியம் செலுத்த வேண்டும். பாலிசியின் முதல் ஆண்டில் ரூ.92,535 (ஜிஎஸ்டி 4.5 சதவீதம்) பிரீமியமும், இரண்டாம் ஆண்டு முதல் 12ம் ஆண்டு வரை ஆண்டுக்கு ரூ.90,542 (2.25 சதவீதம்) பிரீமியமும் செலுத்த வேண்டும்.

பிரீமியம் செலுத்தும் காலத்தை முடித்த பிறகு 37 மற்றும் 38 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, 39வது ஆண்டு முதல் 100வது ஆண்டு வரை எல்ஐசியிலிருந்து ரூ.1 லட்சம் (உறுதிப்படுத்தப்பட்ட தொகையில் 10 சதவீதம்) வருமானப் பலன் உங்களுக்கு வழங்கப்படும்.

பாலிசி பலன்கள்:
ஜீவன் உத்சவின் கீழ், பாலிசி பலன்கள் மொத்தமாகவோ அல்லது முதிர்ச்சியின் போது செலுத்தப்படுவதில்லை, அதேசமயம் இந்த பாலிசியின் கீழ் பணம் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுகிறது. அதாவது மொத்த தொகைக்கு பதிலாக, அவ்வப்போது பணம் செலுத்தப்படுகிறது. ஃப்ளெக்ஸி இன்கம் பெனிபிட் விருப்பத்திலும், பிரீமியம் செலுத்தும் காலத்தைப் பொறுத்து ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் அடிப்படைத் தொகையில் 10 சதவீதத்தை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் பிரீமியம் செலுத்தும் காலத்துக்கு பிறகு பாலிசிதாரர் வாழ்வுக்கால பயனாக சீரான வருமான பலன், விருப்ப வருமான பலன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் புத்தாண்டு பரிசு! DA மீண்டும் அதிகரிக்கும்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News