2018-ம் ஆண்டின், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் டி நோர்தாஸ், பால் ரோமர் ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!
பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய பொருளாதார ஆய்வுக்காக இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டிற்கான பொருளாதார பிரிவில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS: ⁰The Royal Swedish Academy of Sciences has decided to award the Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2018 to William D. Nordhaus and Paul M. Romer. #NobelPrize pic.twitter.com/xUs6iSyI7h
— The Nobel Prize (@NobelPrize) October 8, 2018
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
அந்த வகையில் இன்று பொருளாதார பிரிவில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது!