மழையில் நனைந்துவிட்டால் உடனடியாக துணிகளை மாற்ற வேண்டும். ஈரமான ஆடைகளை தொடர்ந்து அணிந்து இருந்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. நாள் முழுவதும் ஈரமான துணிகளை அணியும் போது உடலின் வெப்பநிலை மாறி குளிர்ச்சியடைகிறது. எனவே தான் பலருக்கும் இந்த சமயத்தில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க ஈரமான துணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். தற்போது வெயில் காலம் முடிந்து மழைக்காலம் துவங்கி உள்ளது. எனவே நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. வேலைக்கு செல்லும் போது அல்லது வெளியில் செல்லும் போது மழை பெய்தால் நனைய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
மேலும் படிக்க | அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
என்னதான் ரெயின்கோட் அல்லது குடையை பயன்படுத்தினாலும் துணிகள் நனைந்துவிடும். மீண்டும் வீட்டிற்கு வரும் வரை அவற்றை மாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த சமயத்தில் நீண்ட நேரம் ஈரமான ஆடைகளை அணிந்து இருக்கும் போது நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மழைகாலத்தில் போதுமான வெளிச்சம் இல்லாததால் துணிகளும் அவ்வளவு சீக்கிரம் காய்வது இல்லை. எனவே, மழை காலத்தில் கூடுதல் துணிகளை கைவசம் வைத்து கொள்வது நல்லது. ஈரமான ஆடைகளை நீண்ட நேரம் அணிவதால் தோல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும். அதுமட்டுமின்றி, ஈரமான உள்ளாடைகளை நீண்ட நேரம் அணிந்து இருக்கும் போது தொற்று அபாயத்தையும் அதிகரிக்கிறது.
ஈரமான ஆடைகளை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்
பொதுவாக மழைக்காலத்தில் அதிக நோய்கள் பரவும். மழையில் நனைந்த பின் நீண்ட நேரம் ஈரமான ஆடைகளை அணிந்து இருக்கும் போது தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆடைகள் ஈரமாக இருக்கும் போது உடலின் இயற்கையான வெப்பநிலையும் வெளியேறுகிறது. இதனால் இந்த பருவத்தில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்தும் பரவக்கூடிய நோய்கள் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஈரமான உள்ளாடைகளை நீண்ட நேரம் அணிந்து இருந்தால் பிறப்புறுப்பில் தொற்று நோய்கள் ஏற்படும். இதன் காரணமாக அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஈரப்பதமான பகுதியில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். எனவே அங்கு சொறி அல்லது பருக்கள் தோன்றும். பின்னாளில் இவை பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. எனவே மழையில் நனைந்தால் உடனே உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு மழையில் நனைய மிகவும் பிடிக்கும். அவர்களின் ஆசைக்கு நனையவிட்டால் பின்பு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் நீண்ட நேரம் ஈரமான உடையில் இருக்கும் போது நிமோனியா ஆபத்து அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | Face Wash Tips: ஒரு நாளுக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ